தல அஜித்தைப் பின்பற்றுகிறாரா மாளவிகா மோகனன்

14

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன். இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் ஆப்பிரிக்காவிற்கு விடுமுறைக்காக சென்ற போது தனது புகைப்படம் எடுக்கும் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார்.

சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படத்தில் அறிமுகமன மாளவிகா மோகனன், அதன்பிறகு விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தவுடன் ரசிகர்களிடையே பிரபலமாக பேசப்பட்டு வருகிறார்.

பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ.மோகனனின் மகள் மாளவிகா மோகனன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. எனவே அழகான நடிகை தனது தந்தையிடம் இருந்து புகைப்படம் எடுக்கும் திறமைகளையும் பெற்றுள்ளார். அண்மையில் ஒரு நேர்காணலில், அவர் புகைப்படங்களை எவ்வாறு எடுக்கிறார். அது ஏன் தன்னை கவர்ந்திழுக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் இவர் மோட்டார் ரேஸ் பைக் ஓட்டுவது போல் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். தற்போது புகைப்படம் எடுப்பது போல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளதால், தல அஜித்தைப் போன்று பைக் ரேஸ் மற்றும் புகைப்படம் எடுக்கும் பழக்கம் கொண்டிருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

View this post on Instagram

It was dusk and we were heading back to our camp in ‘Arusha’ when our guide stopped our jeep and pointed us to a tree. It took a couple of seconds for us to spot this gorgeous creature as the final rays of the sun had almost slipped away from the sky by then. We all just stared, taking the sight in, of seeing nature at its most primal form. We had no hopes of getting a good picture without any light in the sky, and the ones we did manage to get were really grainy. But we were still happy that we got to witness this magnificent sight which seemed right out of something like natgeo, which I used to watch so much as a child. Definitely the highlight of our safari! 🐆 Shot on Sony A7R3 + Sony GM 100-400 P.S. Thank you for making my grainy picture so beautiful with your edit @varun.aditya !

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on