ரசிகர்களை ஏமாற்றிய மடோனா

8
பிரேமம் மலையாள படத்தில் அறிமுகமான நடிகை செபாஸ்டியன் மடோனா, தமிழில் காதலும் கடந்து போகும், ஜுங்கா, கவன், ப.பாண்டி, வானம் கொட்டட்டும் ஆகிய படங்களின் நடித்துள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மடோனா வெளியிட்டுள்ள பதிவில், எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் டன் கணக்கில் நன்றிகள். ஆனால் இன்று எனது பிறந்தநாள் இல்லை. இணையத்தில் இன்று எனது பிறந்தநாள் என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் இதேப் போல இன்னொரு நாளும் கொண்டாடக் கிடைத்திருப்பது உண்மையில் மகிழ்ச்சியான விஷயம், வாழ்த்து கூறிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மடோனாவின் இந்த பதிவை பார்த்து, பிறந்தநாள் வாழ்த்து கூறிய நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் இந்த பொய் பிறந்தநாளையும் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார் மடோனா. அந்த கேக்கில், “ஹேப்பி பர்த்டே கூகுள் டோனா”, என எழுதி ஜாலி செய்திருக்கிறார் மடோனா.

View this post on Instagram

By @rahul_raj_._r

A post shared by Madonna Sebastian (@madonnasebastianofficial) on