அஜித் பட நடிகைக்கு 6 மாதம் ஜெயில்!

104


நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான அசல் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்ட இந்தி நடிகை கோய்னா மித்ராவுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் ரூபாய் செக் மோசடி வழக்கில் டெல்லி கோர்ட் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.


முஸ்பர் என்ற இந்திப்படத்தில் இடம்பெற்ற சகி சகி என்ற பாடல் மூலம் பாலிவுட்டின் பிரபல நடிகையானவர் கோய்னா மித்ரா. பல்வேறு படங்களில் குத்துப்பாடல்களுக்கு குத்து டான்ஸ் ஆடுவதில் பெயர் பெற்றவர். இவர், கடந்த 2013ம் ஆண்டு பூனம் சேத்தி என்ற மாடல் அழகியிடம் 22 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். அந்த தொகையை சொன்ன தேதியில் திருப்பிக் கொடுக்கவில்லை.


இதனால் அதே ஆண்டு டெல்லி கோர்ட்டில் கோய்னா மித்ரா மீது, பூனம் சேத்தி வழக்கு தொடர்ந்தார். அதில் கோய்னா வாங்கிய பணத்தைத் திருப்பித் தரவில்லை. அவர் கொடுத்த 2 லட்ச ரூபாய் செக் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது, என்று குறிப்பிட்டிருந்தார்.


இந்த வழக்கு விசாரணை டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் நேற்று (ஜூலை 22ம்தேதி) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், செக் மோசடிக்காக கோய்னா மித்ராவுக்கு 6 மாத காலம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.


நடிகை கேய்னா தமிழில் விக்ரமுடன் தூள் படத்திலும், சூர்யாவுடன் அயன் படத்திலும், அஜித்துடன் அசல் படத்திலும் குத்தாட்டம் போட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.