முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

12

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் 97வது பிறந்தநாளை இன்று திமுக மட்டுமின்றி தமிழக முழுவதும் கொண்டாடி வருகின்றனர். பிறந்தநாள் குறித்த ஹேஷ்டேக்குகளும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் மு.கருணாநிதியின் தமிழ் புலமையால் கவர்ந்திழுக்கப்பட்டவர்களில் ஒருவர் உலகநாயகன் கமல்ஹாசன். கருணாநிதியால் பலமுறை பாராட்டு பெற்றவர் கமல்ஹாசன். இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு தனது சமூக வலைத்தளத்தில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:

பகுத்தறிவை எழுத்தில் பேசி, செந்தமிழில் பெயர் சூட்டல் தொடங்கி, பேருந்தில் திருக்குறள் வரை தமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் கலைஞர் அவர்களை இந்நாளில் நினைவு கூர்கிறேன். சமூக நீதியையும் வளர்ச்சியையும் தன்னால் இயன்றவரை சாத்தியமாக்கிய அரசியல் ஆளுமை அவர். கருணாநிதி குறித்த கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.