சீரியல் நடிகை விவாகரத்து! நடிகருடன் தவறான தொடர்பா…? உண்மையை கூறிய பிரபல நடிகர்

27

கடந்த சில நாட்களாக சின்னத்திரை ரசிகர்களை ஷாக்கான விசயம் என்றால் பிரபல சீரியல் நடிகை மேக்னா வின்சென்ட் தன் கணவர் டான் டோனியை விவாகரத்து செய்தது தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு காரணம் பொன்மகள் வந்தாள் சீரியலில் நடித்து வரும் மேக்னா தன்னுடன் நடிக்கும் நடிகர் விக்கியை காதலிக்கிறார் என்றும் விரைவில் இருவரும் திருமணம் செய்யப்போகிறார் என்று சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் விக்கி இதனை முற்றிலும் மறுத்துள்ளார். அவர் சீரியலில் ஜோடியாக நடிப்பவர்கள், நிஜ வாழ்க்கையில் ஜோடியாகி விடுவார்கள் என்ற கருத்து தற்போது நிலவி வருகிறது. இது தவறானது. அது போல என்னை பற்றியும் மேக்னா பற்றியும் வதந்திகள் சுற்றி வந்தன.

நாங்கள் இருவரும் சீரியலில் இணைந்து நடித்தோமே தவிர. இருவருமே நல்ல நண்பர்கள் என்பதை தாண்டி வேறு எதுவும் எங்களுக்குள் இல்லை. இது குறித்து ஏற்கனவே நான் தெளிவாக கூறிவிட்டேன்.

அனைத்து குடும்பங்களிலும் இருப்பது போல என் குடும்பத்திலும் பிரச்சனை இருக்கிறது. அதை நாங்கள் பார்த்துக் கொள்வோம். 6 வயது மகன் எனக்கு இருக்கிறான். அவனுடைய வாழ்க்கை எனக்கு முக்கியம். அவனது எதிர்காலம் முக்கியம். தயவு செய்து எங்கள் வாழ்க்கையை கெடுக்காதீர்கள் என விக்கி கூறியுள்ளார்.

இந்நிலையில் மேக்னாவின் முன்னாள் கணவர் டானி டோனி விவாகரத்து பெற்ற ஒரே வாரத்தில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.