வாழ்க்கை வரலாறு படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் யுவன்

42

தமிழ் சினிமாவில் தற்போது பிரபலங்களின் வாழ்க்கை வரலாறை படமாக்குவதில் இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடிகர், நடிகைகளும் இதுபோன்ற படங்களில் நடிப்பதை விரும்புகின்றனர்.

இசை உலகில் அன்று முதல் இன்று வரை தனக்கென்ன தனி இடம் பதித்தவர் இசைஞானி இளையராஜா. அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் யோசனையில் இருப்பதாக அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இதுபற்றி யுவன் கூறுகையில், அந்த படத்துக்கு ராஜா தி ஜெர்னி என்ற தலைப்பு மிக பொருத்தமாக இருக்கும்.

மேலும் இந்த படத்தின் மூலம் நான் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறேன். இளையராஜா வாழ்க்கை வரலாற்றை படமாக்குவது உறுதி செய்யப்பட்டால் இசைஞானி கதாப்பாத்திரத்தில் நடிக்க தனுஷ் பொருத்தமாக இருப்பார்’ என கூறியுள்ளார்.

சமீபத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் கங்கனா ரணாவத் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.