திருப்தி அளிக்கும் வரை போராடுவேன் – தமன்னா

57

சினிமா பின்னணி இல்லாமல் தனித்திறமையினால் போராடி இன்று முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. 15 வயதில் ஹீரோயினாக அறிமுகமானவர், 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தமிழ் மற்றும் தெலுங்கில் ஜொலித்து வருகிறார்.

இதுபற்றி தமன்னா கூறுகையில், சிறுவயதிலேயே நான் வெற்றிகளை பார்த்துவிட்டேன்.எனவே தோல்விகளையும் வெற்றியைப் கையாள்வது போல அணுகுவேன். சினிமா உலகம் இன்று நிறையவே மாறிவிட்டது. சமூக வலைதளங்களின் ஆதிக்கம் தற்போது அதிகமாகிவிட்டது. திறமையுள்ளவர்கள் யார் உதவியின்றி சினிமாவில் நுழைந்துவிட முடியும்.

சினிமாவில் நான் பெரிதாக சாதித்து விடவில்லை. எனக்கு திருப்தி அளிக்கும் வரை ஏதாவது செய்யும்வரை போராடிக் கொண்டிருப்பேன். அந்த நாள் வந்ததும் நின்றுடுவேன் என தமன்னா கூறியுள்ளார்.