தல 61 குறித்து மாஸ் அப்டேட்டை வெளியிட்ட ஜீ.வி.பிரகாஷ் குமார்

12

தல 61 படத்தின் மூலம் அஜித் குமார் மற்றும் சுதா கொங்கரா கூட்டணி குறித்து இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் மாஸான அப்டே்டடை வெளியிட்டுள்ளார்.

நடிகர் அஜித் குமார் நடிக்கும் படம் வலிமை. இது அஜித்தின் 60வது படமாகும். படத்தினை ஹெச். வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். விறுவிறுப்பாக சென்ற படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அஜித்தின் 61 படத்தினை யார் இயக்கப்போவது என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்குவதாக ஏற்கனவே சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் டுவிட்டர் வாயிலாக ரசிகர்களிடையே உரையாடிய இசையைமப்பாளர் ஜீ.வி.பிரகாஷிடம் அஜித் – சுதா கொங்கரா இருவரும் படம் உருவாமா? என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஜிவி பிரகாஷ், “செம்ம ஸ்கிரிப்ட் அது. நடந்ததுனா செம்மையா இருக்கும். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படம் அது. சுதா அந்த ஸ்கிரிப்ட் என்கிட்ட சொல்லிருக்காங்க. அது நடந்தால் நல்லாயிருக்கும்” என பதிலளித்துள்ளார்.

Your Digital PR