மகனுக்கு உருக்கமாக கடிதம் எழுதிய பிரபலம்

48


தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ஜெனிலியா, அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகன் ரியானுக்கு 5வது பிறந்த நாளை கொண்டாடிய ஜெனிலியா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.


அதில், அன்பான ரியான், ஒவ்வொரு பெற்றோரும் அவன் வளர வேண்டாம். இப்படியே இருக்கட்டும் என்று சொல்வார்கள். ஆனால் நான் அப்படியல்ல, உன்னுடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் ரசிக்க விரும்புகிறேன். நான் உனக்கு பறக்க இறக்கைகள் கொடுத்து, அந்த இறக்கைகளுக்கு அடியில் காற்றாக இருக்க விரும்புகிறேன்.


நீ எனக்கு கிடைத்த மிகப்பெரிய விசயம். என்னை அம்மாவாக்கிய சிறு பையனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்- என் முதல் பிறப்பு – என்றும் அந்த பதிவில் ஜெனிலியா தெரிவித்துள்ளார். இந்த கடிதம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

#Genelia #son #Letter