சின்னத்திரை நடிகர்களுக்கான புத்தாண்டு பரிசுகள்

33


சின்னத்திரை நடிகர்களுக்கான புத்தாண்டு பரிசுகள், புத்தாடைகள், இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடிகர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் துணைத்தலைவரும், இயக்குநரும் நடிகருமான மனோபாலா பரிசுகளை வழங்கினார்.

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் ஏ.ரவிவர்மா கூறும் போது, சின்னத்திரை வரலாற்றில் கடந்த 16 ஆண்டுகளில் சின்னத்திரை நடிகர்களுக்கு பரிசுகள் வழங்குவது இதுவே முதல்முறை என்றார். இதில் நடிகர்கள் 150 பேர், நடிகைகள் 150 பேர் என மொத்தம் 300 பேருக்கு பரிசுகள் வழங்கினர்.

இப்போது 1800 பேருக்கு மேல் உறுப்பினர்களாக இந்த சங்கத்தில் உள்ளனர். அடுத்த வருடம் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும் என என் தலைமையிலான சங்கம் முடிவெடுத்துள்ளது. இது ஆரம்பம் தான் என்று தெரிவித்துள்ளார்.