சினிமாவில் 13 வருடங்களை தாண்டி சாதனை படைத்து வரும் காஜல் அகர்வால்

54


தென்னிந்திய நடிகைகளில் பல வருடங்களாக முன்னணி நடிகை வரிசையில் இடம் பிடித்திருப்பவர் நடிகை காஜல் அகர்வால். காஜல் அகர்வால் சினிமாவிற்கு வந்து 13 வருடங்களை கடந்துள்ளார்.

தன்னுடைய முட்டைக் கண்களாலும், செதுக்கிய சிலைபோன்ற உடலமைப்பாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். ஆரம்பத்தில் சிறிய படங்கள், சிறிய வேடங்கள்தான் கிடைத்தன. அதன்பிறகு அவரது படங்களுக்கு ஏற்பட்ட வரவேற்பை வைத்து மளமளவென உயர்ந்தார். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியானார். இதனால் மார்க்கெட் உயர்ந்தது.

கடந்த வருடம் காஜல் அகர்வால் நடிப்பில் விவேகம், மெர்சல் படங்கள் வெளிவந்தன. தெலுங்கில் நடித்த இரண்டு படங்கள் சமீபத்தில் திரைக்கு வந்தன. இப்போது இந்தி குயின் படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகும் பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இவருக்கு சமீபத்தில் சிங்கப்பூர் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் காஜல் அகர்வாலின் மெழுகுச் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகைகளிலேயே சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை வைத்தது நடிகை காஜல் அகர்வாலுக்கு தான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வால், அதனையடுத்து துல்கார் சல்மானுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால் சினிமாவிற்கு வந்து 13 வருடங்களை கடந்துள்ள நிலையில் அவரது ரசிகர்கள் அதனை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
#13YearsOfKajalAggarwal #KajalAggarwal #Flixwood