தர்பார் படத்தின் தீம் மியூசிக் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை வெளியீடு

39

ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

மேலும் இந்தப் படத்தில் நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில், இந்தப் படத்தின் தீம் மியூசிக் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை வெளியாகவுள்ளது.

இதனை அந்தந்த மொழிகளில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.