சொந்த வீட்டிலேயே கொள்ளையடித்து தலைமறைவான சீரியல் நடிகை

15

தனது சொந்த வீட்டிலேயே கணவனுக்கு கொள்ளையடிக்க திட்டம் போட்டுக் கொடுத்த தெய்வமகள் சீரியல் நடிகை ஒருவர் தலைமறைவாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள விவசாயி ஒருவரின் மகன் மணிகண்டன். இவர் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து டிவி சீரியல் நடிகைகளின் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். அந்த வகையில்தான் தெய்வமகள் சீரியலில் நடித்த சுசித்ரா என்ற நடிகையுடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு தனி குடித்தனம் நடத்தி வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் படப்பிடிப்பு இல்லாததால் இருவரும் செலவுக்கு பணமின்றி தவித்துள்ளனர். இந்த நிலையில் தனது சொந்த ஊருக்கு நடிகையும் தனது மனைவியுமான சுசித்ராவை மணிகண்டன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

மணிகண்டன் அங்கு சில நாட்கள் தனது மனைவியுடன் சொந்த ஊரிலேயே தங்கியுள்ளார். அவரது வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கண்ட சுசித்ரா, அந்த பணத்தை கொள்ளையடித்து சென்று சென்று குறும்படம் தயாரித்து யூடியூப்பில் அப்லோட் செய்து பணம் சம்பாதிக்கலாம் என்ற ஐடியா கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சுசித்ரா மட்டும் முதலில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். மணிகண்டன் சில நாட்கள் கழித்து அந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துள்ளார். ஆனால் இதுகுறித்து மணிகண்டனின் பெற்றோர் காவல்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மணிகண்டன் தான் குற்றவாளி என்பதை கண்டுபிடித்த போலீசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்ததோடு, அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகளையும் பறிமுதல் செய்தனர்

இந்த நிலையில் காதல் கணவன் கொள்ளை அடிக்கும் போது மாட்டிக் கொண்டதை அறிந்த தெய்வமகள் சீரியல் நடிகை சுசித்ரா தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

தனது காதல் கணவன் வீட்டிலேயே கொள்ளையடிக்க திட்டம் போட்டு ஐடியா கொடுத்த சீரியல் நடிகையின் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Your Digital PR