தர்பாரினால் விவசாயி வாழ்க்கை பாதிப்பு

40


காமெடி நடிகர் அப்புக்குட்டி நடித்துள்ள படம் வாழ்க விவசாயி. ஒரு ஏழை விவசாயின் வாழ்க்கையை மையமாக இந்தப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் பொங்கல் தினத்தன்று படத்தை வெளியிட படக்குழுவினர் எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர். ஆனால் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படம் அனைத்து திரையரங்குகளிலும் ரிலீசாகியதால் வாழ்க விவசாயி படம் வெளியாகவில்லை.

படம் குறித்து அப்புக்குட்டி கூறுகையில், சினிமாவிற்கு வருவதற்கு முன் நான் விவசாய வேலைதான் பார்த்து கொண்டிருந்தேன். எனக்கு விவசாயத்தில் அனைத்து வேலைகளும் தெரியும். இந்தப்படத்தில் விவசாயத்திற்கு எதிரான வணிக அரசியல் பற்றி சொல்லியிருக்கிறோம்.

படம் பொங்கல் அன்று ரிலீசாகும் என பெரிதும் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் தர்பார் ரிலீசினால் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. விவசாயின் வாழ்க்கை தான் போராட்டம் என்றால், விவசாயி பற்றி படம் எடுத்தால் அதை வெளியிடுவதும் போராட்டமாகத் தான் இருக்கிறது’ என கூறியுள்ளார்.