கவர்ச்சி கோதாவில் சண்டையிட்டுக் கொள்ளும் ஷிவானி – சித்ரா மோதல்

21

சமூக வலைதளங்களில் பொதுவாக ரசிகர்களிடையே தான் மோதல் வரும். ஆனால் சமீபநாட்களாக திரைப்பிரபலங்கள் இடையே சண்டைகள் நடக்கின்றன. கொரோனா காலத்தில் யார் யார் சண்டை போட்டனர் என்பதை அனைவரும் அறிவர். தற்போது புதிதாக சின்னத்திரை நடிகைகள் ஷிவானி, சித்ரா மோதல் ஆரம்பமாகி உள்ளது.

ஷிவானி ‘பகல்நிலவு’ உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தவர், சித்ரா ‘பாண்டியன் ஸ்டோர்’ தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இருவருமே டுவிட்டர், இன்ஸ்ட்ராகிராமில் பிசியாக இருக்கிறார்கள். சித்ரா ஹோம்லியான படங்ளை விதவிதமாக போட்டோஷுட் எடுத்து பகிர்ந்து வருகிறார். ஷிவானியோ தினமும் ஏதாவது ஒரு கவர்ச்சி போட்டோக்களை பதிவிடுகிறார்.

சமீபத்தில் ஒரு பாலோயர்ஸ் சித்ராவிடம் “உங்களிடமிருந்து நிறைய கவர்ச்சி படங்களை எதிர்பார்க்கிறோம்” என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த சித்ரா, “என்னிடம் அதை எதிர்பார்க்காதீர்கள். 2000ல் பிறந்த அந்த நடிகையின் இன்ஸ்ட்ராகிராம் பக்கதிற்கு போங்கள் நிறைய இருக்கும்” என்று பதில் அளித்தார். அதற்கு அந்த பாலோயர்ஸ் “நீங்கள் ஷிவானியைத்தானே குறிப்பிடுகிறீர்கள்?” என்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஷிவானி, “என்னை உனக்கு பிடிக்கா விட்டாலும் தினமும் என்னை பார்க்கும் நீயும் என் ரசிகைதான். மற்றவர்கள் பற்றி பேசும் முன் உன் முதுகை பார்த்துக்கொள்” என்று பதில் கூறியிருந்தார். அவரது பதிவில் பொதுவெளியில் குறிப்பிட முடியாத ஆபாச வார்த்தையையும் பதிவிட்டிருந்தார்.