தகுதியற்ற இடத்தில் கால்வைத்து விட்டார் சேரன்! ரசிகரின் உருக்கமான ட்வீட்!!


சேரன் தகுதியற்ற இடத்தில் கால் வைத்து விட்டதாகவே நினைக்கிறேன் என்று அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் எழுதியிருக்கும் ட்வீட் பதிவினை பலரும் ரீ-ட்வீட் செய்து வருகிறார்கள்.


பிக்பாஸ் வீட்டில் சேரன் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருவதைத் தொடர்ந்து பலரும் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். திரையுலக பிரபலங்கள் பலரும் சேரன் பிக்பாஸில் இருந்து வெளியேற வேண்டும் என்று கோரிக்கை வைத்து, அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். #ComeOutCheran என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆகி, வைரலாக பரவி வருகிறது.


சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் சேரனின் ரசிகர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். அரசுப்பள்ளி ஆசிரியர் செல்வம் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ் சினிமாவில் தனிமுத்திரை பதித்த மனிதர்.அருமையான படைப்பாளி. ட்விட்டரில் எங்களோடு உரையாடும் எளிய மனிதர் இயக்குநர் சேரன்.

தகுதியற்ற இடத்தில் கால் வைத்து விட்டதாகவே நினைக்கிறேன். தன்னுடைய வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு இது என்று அவரே ஒரு நாள் கூறுவார், என்று குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவை பலரும் ரீ-ட்வீட் செய்து வருகிறார்கள்.