பிக்பாஸ் 4 சீசனில் களமிறங்கும் கவர்ச்சி நடிகைகள்

27

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு போட்டியாளர்களின் வருகை ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெறுவதாகும்.

தமிழைப் போன்று தெலுங்கிலும் தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 4ஐ தொட்டுவிட்டது. கடந்த முறை சீசன் 3 ஐ பிரபல நடிகரான நாகார்ஜூனா தொகுத்து வழங்கினார். ஆனாலும் முதல் சீசன் போல இல்லை என்பதே பலரின் கருத்து.

இந்நிலையில் சீசன் 4 ஐ தொகுத்து வழங்க நடிகை சமந்தா அல்லது நடிகை ரம்யா கிருஷ்ணனை அணுகியுள்ளார்களாம். இருவரில் யார் சம்மதம் தெரிவிப்பார்கள் என்பதை பொருத்திருந்து காணலாம்.

மேலும் இந்நிகழ்ச்சி சூடுபிடிக்க கிளாமர் நடிகைகளான பிரியா வட்லாமணி, ஹம்சானந்தினி, ஸ்ரத்தா தாஸ், யாமினி பாஸ்கர் ஆகியோரை போட்டியாளர்களாக தேர்ந்தெடுத்துள்ளார்களாம். அவர்களும் ஓகே சொல்லிவிட்டார்களாம்.

பெண் போட்டியாளர்கள் கிளாமரான உடையில் சுற்றுவதும், ஆண் போட்டியாளார்களுடன் காதல் வலையில் சிக்குவதும் என பிக்பாஸ் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கிறது என்றே சொல்லலாம்.