மோசடிகாரர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்! நடிகை பூர்ணா

6

திருமணம் என்ற போர்வையில் நடிகை பூர்ணாவிடம் பணம் பறிக்க முயன்றது ஒரு மோசடி கும்பல். பூர்ணாவின் தாயார் அளித்த புகாரின் பேரில் இந்த கும்பலைச் சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து பூர்ணா கூறுகையில்,

எங்கள் உறவினர்களின் நண்பர்கள் மூலம் தனது பெயர் அன்வர் என்று சொல்லி எங்கள் குடும்பத்தினருடன் அந்த நபர் அறிமுகமானார். முதலில் அவர்களை நம்பினோம். பின்பு அவர்களை நேரில் சந்தித்த பின்பு தான் எங்களுக்கு சந்தேகம் எழுந்தது. அவர்களை பற்றிய விபரங்களை கேட்டதும் பதில் சொல்லாமல் ஓடிவிட்டனர். அதன்பிறகுதான் போனில் பணம் கேட்டு மிரட்டினார்கள்.

என்னைப்போன்று இதுபோல யாரும் பாதிக்க கூடாது என்றுதான் நான் புகாரளித்தேன். பலர் இவர்களால் பாதிக்கப்பட்டது இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்தது. சினிமா வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று பலர் வருவார்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பல இளம் பெண்கள் கொச்சியில் ஓட்டல்களில் தங்கி நடிக்க வாய்ப்பு தேடுகிறார்கள். யார் வாய்ப்பு வாங்கி தருவதாக அணுகினாலும் அவர்களை பற்றி நன்றாக விசாரித்து தெரிந்து கொண்டு முடிவு எடுங்கள் என நடிகை பூர்ணா அறிவுரை கூறினார்.