தீபிகாவிற்கு ஆலோசனை கூற நான் தயார்! பாபா ராம்தேவ்

38


இந்தியா முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது முகமூடி அணிந்த கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பாதிப்படைந்த மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கூறினார். அவருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர். இருப்பினும் தீபிகா மீது சிலர் கடுமையான விமர்சனங்களை ஒரு சில தரப்பினர் முன்வைத்தனர்.

இந்நிலையில் தீபிகா படுகோனே மீதான விமர்சனத்தை தவிர்க்க தன்னை ஆலோசகராக நியமிக்கலாம் என பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் அரசியல் – சமூக பிரச்சனைகள் தொடர்பான நிலைப்பாட்டை எடுப்பதற்கு முன் தன்னிடம் ஆலோசனை பெற்றால் தீபிகாவிற்கு எந்த பிரச்சனையும் வராது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவரது கருத்திற்கு பலர் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்துள்ளனர்.