சின்னத்திரை நாயகிக்கு கொரோனா தொற்று உறுதி! கலக்கத்தில் சக நடிகைகள்

7

தனியார் தொலைக்காட்சியில் நடித்து வரும் சீரியல் நடிகை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸின் தாக்குதல் இந்தியாவிலும் எதிரொலித்தது. இதில் பல்லாயிரக்கணக்காணோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது பாலிவுட்டில் தொடங்கி தற்போது கோலிவுட் வரை பல பிரபலங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அரண்மனைக்கிளி சீரியலில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை மோனலிசா, இவருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவருடன் ஷுட்டிங் ஸ்பாட்டில் நடித்துள்ள சக நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர்.

Your Digital PR