அனிருத்தை சும்மா கிழிகிழின்னு கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்கள்

76


இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா நடிக்கும் படம் தர்பார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள தர்பார் படத்தின் கிழி பாடல் நேற்று யூடியுப் தளத்தில் வெளியானது. இப்பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். படம் வெளியான சில மணிநேரங்களிலே டிரெண்டாக்கினர் ரசிகர்கள்.

பாடல் வெளியான சிலமணி நேரத்தில் பெரும் வரவேற்பை பெற்ற பாடலை தற்போது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கடும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சும்மா கிழி பாடல், தேவா இசையில் ஹிட் அடித்த வைகாசி பொறந்தாச்சு படத்தில் வரும் தண்ணி குடம் எடுத்து என்ற பாடலின் மெட்டைப் போல இருப்பதாக தெரிவித்தனர்.

இன்னும் சிலர் அனிருத்தின் பழைய பாடல்களும் காப்பியடித்து போல இருப்பதாக தெரிவிக்கின்றனர். அதன்படி கோலமாவு கோகிலா படத்தில் வரும் ஒரு பாடல் ஆல்பம் சாங்கிலிருந்து சுடப்பட்டது என்றும், அனிருத் அறிமுகமான படத்திலிருந்து வரும் ஒய் திஸ் கொலவெறி பாடல், இளையராஜாவின் வீட்டுக்கு வீடு வாசல்படி வேணும் என்ற பாடலும், சந்திரபோஸ் படத்தில் வரும் வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை என்ற பாடலையும் இணைத்து வந்த கலவை என்றும் விமர்சிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அனிருத்தின் ரசிகர்கள் என்னதான் ஆச்சு ஏன் இப்படி என விமர்சித்து வருகின்றனர்.
#Anirudh #Rajinikanth #Darbar #ChummaKizhi #Flixwood