மகனுடன் உற்சாகமாக பொழுதை கழித்து வரும் எமி ஜாக்சன்

2

கொரோனா ஊரடங்கு பலரது வாழ்க்கை முறையே முழுவதுமாக மாற்றியுள்ளது. திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது வீட்டில் பொழுதை கழித்துவரும் சூழல் அனைவருக்கும் முற்றிலும் புதுமையான அனுபவமாக அமைந்திருக்கும்.

லண்டன் மாடல் நடிகை எமி ஜாக்சன் மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தாண்டவம், தங்கமகன், ஐ போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு, ஹிந்தியிலும் கூட சில படங்களில் நடித்தார்.

பின்பு ஜார்ஜ் பனாய்டோ என்பவருடன் திருமணம் செய்யாமலே வாழ்ந்து வருகிறார். நிச்சயதார்த்தம் நடந்த சில மாதங்களில் திருமணம் ஆகாமலே கர்ப்பமானார். 2019, செப்டம்பரில் இவருக்கு மகன் பிறந்தார். மகனுக்கு ஆண்ட்ரீஸ் என பெயரிட்டுள்ளார்.

குழந்தை பிறந்து 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் குழந்தையுடன் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சி உடன் செலவிட்டு வருகிறார். கொரோனா லாக்டவுனால் முழுநேரமும் குழந்தையுடனேயே நேரத்தை செலவிட்டு வருகிறார்.

குழந்தையின் ஒவ்வொரு செய்கையையும் ரசித்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். காலையில் சூரிய வெளிச்சத்தில் மகன் உடன் உற்சாகமாக பொழுதை கழிக்கும் படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

மீண்டும் தன்னுடைய பழைய ஸ்லிம்மான உடம்பிற்கு திரும்பி இருக்கும் எமி, அவ்வப்போது உடற்பயிற்சி செய்யும் படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.