தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் சின்னத்திரை நாயகி ஆல்யா மானசா

23

சின்னத்திரையில் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடிகளில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஜோடி சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. இந்த அழகிய ஜோடிகளுக்கு சில மாதங்களுக்கு முன் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

சமீபத்தில் கூட தனது பெண் குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் சஞ்சீவ். இந்நிலையில் தனது குழந்தையுடன் முத்தம் கொடுத்து, கொஞ்சி விளையாடும் அழகிய வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ஆல்யா மானசா.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.