மீண்டும் நயன்தாராவை இயக்குகிறாரா பிரபுதேவா?

18

நீண்ட வருடங்களுக்கு பிறகு பிரபு தேவா இயக்கும் புதிய படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளன.

பிரபுதேவா இயக்கத்தில் விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடித்துவந்த படம் ‘கருப்புராஜா வெள்ளைராஜா’. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தமானார். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில், சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் லாக்டவுனுக்கு பிறகு மீண்டும் இப்படத்தை தொடங்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் இயக்குனர் பிரபுதேவா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதில் விஷாலுக்கு பதில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

மேலும் இப்படத்தில் நயன்தாராவையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபுதேவா இயக்கிய வில்லு படத்தில் ஏற்கனவே நயன்தாரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.