ஜோதிடரின் அறிவுரையால் பெயரை மாற்றிக் கொண்ட முன்னணி நடிகை

60

திமிரு மற்றும் கஜினிகாந்த் போன்ற படங்களில் கதாநாயகியின் தோழியாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை நீலிமா ராணி. இவர் திரைப்படங்களை விட சின்னத்திரை நாடகங்களில் நெகட்டிவ் கேரக்டரில் மக்களின் மனதை கவர்ந்தவர். இவர் ஜோதிடரின் அறிவுரையால் தற்போது தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.

நடிகை நீலிமா ராணி சமீபத்தில் ஜோதிடரின் அறிவுரை கேட்டு தனது பெயரான நீலிமா ராணி என்பதை நீலிமா இசை என்று மாற்றிக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அவர் உறுதி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது

தற்போது நீலிமா இசை, ’கருப்பங்காட்டு வலசு’ என்ற படத்தில் நடித்து வருவதாகவும் செல்வேந்திரன் என்பவர் இயக்கும் இந்த படத்தில் மூட நம்பிக்கைகள் நிறைந்த ஒரு கிராமத்தை மாற்றும் நவநாகரீக பெண் கேரக்டரில் நடித்து வருவதாகவும் இந்த படம் தனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் நீலிமா இசை தெரிவித்துள்ளார்.

நீலிமா ராணியின் கணவர் பெயர் இசை வாணன் என்பதால் கணவனின் முதல் வார்த்தையை தனது பெயருடன் இணைத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.