நடிப்புக்கு முழுக்கு போடும் சார்மி!

13

நடிகை சார்மி என்பது இன்றை சினிமா ரசிகர்களுக்கு பெரும்பாலும் தெரிய வாய்ப்பில்லை. சிம்பு கதாநாயகனாக அறிமுகமான காதல் அழிவதில்லை படத்தில் நாயகியாக அறிமுகமானவர் தான் சார்மி. அதன்பின் காதல் கிசு கிசு, ஆஹா எத்தனை அழகு ஆகிய இரண்டு தமிழ்ப்படங்களில் மட்டுமே நடித்தார். அதன்பிறகு முழுக்க தெலுங்குப்படங்களில் மட்டும் நடித்தார். ஒரு சில மலையாள, கன்னட, ஹிந்திப்படங்களிலும் நடித்தார்.

சார்மி கதாநாயகியாக நடித்து கடைசியாக வெளிவந்த படம் ஜோதி லட்சுமி. ஐந்து வருடங்களுக்கு முன்பே அந்தப்படம் வெளியாகும் போதே திரைப்படங்களிலிருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார். ஆனால் தற்போது நடிப்பை விட்டு முழுமையாக விலகுவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர் பூரி ஜென்னாத்துடன் இணைந்து திரைப்படத் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார் சார்மி. சிம்புவின் அறிமுகக் கதாநாயகி அதற்குள் நடிப்பிலிருந்து விலகுவது ஆச்சரியம்தான். சார்மி அறிமுகமான காலத்தில் அறிமுகமான த்ரிஷா, நயன்தாரா ஆகியோர் இன்னமும் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.