கடவுள் பார்வதியாக களமிறங்கும் பிக்பாஸ் நடிகை

108


பிக்பாஸ் நிகழ்ச்சி சின்னத்திரை நடிகர்கள் மட்டுமின்றி வெள்ளித் திரை ரசிகர்களையும் கவனிக்கச் செய்தது. பிக்பாஸ் மூன்று சீசன்களை கடந்துள்ளது. இதில் முதல் சீசன் அனைவராலும் கொண்டாடப்பட்டது. அதிலும் இறுதி போட்டியாளர்களாக தேர்வான 5 பேரின் கொண்டாட்டங்கள் யாராலும் மறக்க முடியாத விசயம் ஒன்று.

இதில் முதல் சீசன் போட்டியாளர்கள் அனைரும் ஒவ்வொரு படங்களாக கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிந்து மாதவி, முதல் சீசன் முடிந்தபிறகு தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கினார்.

மிகவும் செலக்ட்டிவ் ஆன படங்களை மட்டுமே தேர்வு செய்த பிந்து, தற்போது மாயன் என்ற படத்தில் கடவுள் பார்வதியாக நடித்திருக்கிறார். இந்த படங்கள் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.