அலியாபட் கனவை நிறைவேற்றிய  ராஜமவுலி..!

பார்வையாளர்களின் விமர்சனம் அலியாபட் கனவை நிறைவேற்றிய  ராஜமவுலி..! 0.00/5.00

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஆர்ஆர்ஆர் என்ற பிரம்மாண்ட படத்தை  இயக்கி வருகிறார். இப்படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்து வருகின்றனர்.


இதில், பாலிவுட் நடிகை அலியா பட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அலியா பட் கூறுகையில்,  “நான் கரன் ஜோஹர் மூலம் சினிமாவில் அறிமுகமானதிலிருந்தே சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் ராஜமவுலி ஆகியோர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது அந்த கனவு நிறைவேறியுள்ளது” என்று கூறியுள்ளார்.


மேலும், இப்படத்தின் இந்த மாத படப்பிடிப்பில் அலியா பட்  கலந்துகொள்வதாக  தகவல் வெளிவந்துள்ளது.