தமிழ் சினிமாவின் பொற்கால இயக்குநர் மகேந்திரனின் உதிரிப்பூக்கள்

16

இன்றும் பலருடைய தேர்வில் தமிழின் சிறந்தபடமாக உதிரிப்பூக்கள் இருந்து வருகி்றது. பல சினிமாக்களை பார்த்து பார்த்து பயிற்சி பெற்ற ஒரு மனம் வழமையான் சினிமாவை ஏற்காது. அது படைப்பில் இன்னும் இன்னும் என தேடிக்கொண்டேயிருக்கும் அப்படி தேடித்தேடி வரும் மனதுக்கு இன்னும் இன்னும் என எடுத்துக் கொடுத்துக்கொண்டேயிருக்கும் வகையில் பல நுண்மையான வேலைப்பாடுகளுடன் எந்த படைப்பு எஞ்சி நிற்கிறதோ அதுவே காலத்தை கடந்து பயணிக்கிறது

. ஒவ்வொரு தலைமுறையும் புதிது புதிதாய் அந்த படைப்பிலிலிருந்து கற்றுக் கொண்டேயிருக்கிறது உதிரிப்பூக்களின் சிறப்பு இதுதான்.

கிராமத்திலொரு பள்ளிக்கூடம்.. அந்த பள்ளிகூடத்தின் தாளாளர் விஜயன் எதற்கும் மசியாத இரும்புத்தலையன். அவருக்கு கிளி போல ( அஸ்வினி உண்மையில் கிளியேதான் ) மனைவி இரண்டு குழந்தைகள். ஆனாலும் கண்களில் காமப்பசி. . ஒருநாள் மைத்துனி யின் கவர்ச்சி நடை மனதில் மகுடி வாசிக்கிறது . . அவளை எப்படியாவது அடைந்து விட முடிவெடுக்கிறார். முறையாக மாமனாரிடமே அப்ளிகேஷன் போட்டு மூக்கு உடைபடுகிறார்.

பிற்பாடு மனைவியிடம் கோரிக்கை வைக்க அவளும் மறுக்க இப்போது அவர் மூர்க்கமாகி வேறு வழிகளில் முயல கதை சூடுபிடிக்கிறது . ஊருக்கு புதிய அதிகாரியாக வரும் சரத்பாபுவுக்கும் மனைவிக்கும் முன்கூட்டிய அறிமுகத்தை தெரிந்து மனைவிக்கு அவரோடு கள்ளத் தொடர்பு இருப்பதாக அபாண்டமாக பழி சுமத்தி குழந்தைகளை வைத்துக்கொண்டு மனைவியை மாமனார் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார்.

இதனிடையே மனைவி அஸ்வினி குழந்தைகளைப்பிரிந்த வேதனைதாளாமால் இறந்து போக விஜயன் மைத்துனியை கல்யாணம் செய்யும் கனவும் தகர்ந்து போகி்றது. இதனால் இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்கிரார். ஆனாலும் மைத்துனி மீதான ஏக்கம் தீரவில்லை.

. ஒருநாள் மைத்துனியும் காதலன் சுந்தரை திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது . கல்யாணத்துக்கு முன் தினம் குழந்தைகளை தன்னோடு அனுப்பச்சொல்லி வீட்டுக்கு வரும் மைத்துனியை அறைக்குள் அடைத்து பலாத்காரமாய் ஆடைகளை உருவி நிர்வாணமாக்கி உன்னை தொடமாட்டேன் ஆனால் இதுதான் நான் உனக்கு கொடுக்கும் தண்டனை உன்னை முதலில் பார்த்த ஆண் நானாக இருக்கட்டும் அது ஒவ்வொரு முறை உன் கணவன் உன்னை தொடும்போதும் நினைவுக்குள் இம்சிக்கட்டும் என புதுமையான தண்டனை கொடுக்கிறார்.

கலயாணத்துக்காக காத்திருக்கும் ஊராருக்கு விஷயம் தெரிந்து கொதிக்கின்றனர் . உடனே விஜயன் வீட்டுக்குச் சென்று அடித்து உதைத்து ஆற்றங்கரைக்கு ஊர்வலமாக அழைத்து வந்து அவன் செய்த பாவங்களுக்காக தண்டனையாக ஆற்றில் மூழ்குமாறு கட்டளையிட அவரும் அதை ஏற்று ஆற்றில் மூழ்கிச்சாக அந்த இரு குழ்ந்தைகளும் அப்பாவைத்தேடி ஆற்றங்கரையில் ஓடுகிறது.

இதற்கு முன் வரை எம்ஜி ஆர் சிவாஜி காலத்திலிருந்து நாயகர்கள் அநியாயத்துக்கு நல்லவர்களாகவும் அவர்களைத்தவிர பெரும்பாலோர் அயோக்கியரகளகவும் இருப்பார்கள். உதிரிப்பூக்களில் அது தலைகீழ் . ஒரு கெட்டவன் தான் ஹீரோ அவனைசுற்றி பல நல்லவர்கள் அனைவரும் அவன் நினைப்புக்கு எதிராக சதி செய்கிறார்கள்.

அந்த மைத்துனியை அவன் அடையவிடாமல் தடுக்கிறார்கள் கடைசியில் அந்த நல்லவர்கள் ஒரே காட்சியில் க்ளைமாக்சில் கெட்டவர்களாகி அவனை ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்யப்போக அவனோ சட்டென திருந்தி இவ்வளவு நாள் நான் செஞ்ச தப்புலயே பெரிய தப்பு உங்க எல்லாரையும் கெட்டவர்களாக மாற்றியதுதான்னு தன்னைத்தானே நொந்து திருந்தி கடைசி காட்சியில் சாவதற்கு முன் குழந்தைகளை கொஞ்சிவிட்டு செத்துப்போவான்.

இன்று வரையும் இந்த புதுமையான திரைக்கதை வடிவத்தை வேறு யாரும் செய்ய வில்லை இனி செய்யவும் முடியாது என்பதுதான் உதிரிப்பூக்களின் தனித்துவம்.

அது போல கதை விஜயன் அவர் மனைவி மைத்துணி சரத்பாபு என ஊர்மக்கள் என சுற்றினாலும் மகேந்திரன் எனும் அபார கலைஞனின் படைப்பு மனம் இரண்டு குழந்தைகளையும் மையப்படுத்தி திரைப்படமாக்கத்தில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் இன்றும் இத்திரைப்படம் உணர்வு ரீதியாக் பெரும் சஞ்சலத்தை நம் மானதுக்குள் உண்டாக்கி காவியத்தன்மை கொண்டதாக மாற்றிவிடுகிறது.

படத்தின் முதல் காட்சியில் தாயுடன் இருகுழந்தைகள் அனாதையாக் இருப்பதில் துவங்கி இறுதியில் ஆற்றில் அனாதைகளாக ஓடுவது வரை இயக்குனரின் முழு கவனமும் அந்த குழந்தைகளை காட்சிப்படுத்துவதில் கவனம் கொண்டிருப்பதும் அவர்கள் இயல்பான வெளிப்பாடுகளிலும் கவனம் செலுத்தியது படத்தை காவியமாக்க உதவுகிறது அதற்கேற்றார் போல இளையராஜாவின் பின்னணி இசையும் அவர்களை சார்ந்தே உருவாக்கம் கொண்டிருப்பதும் சிறப்பு.

அழகிய கண்னே பாடல் காட்சி இன்றும் தமிழ் சினிமாவின் பாடல் காட்சிபடுத்தலில் முதலிடத்தில் இருப்பதற்கும் இதுவே காரணம் .அதில் குட்டிபெண் ஆற்றில் அஸ்வினி துணி துவைக்கும் போது பாவடையை நனையவைத்து உடன் துவைக்கும் பாங்கும் அப்பாவின் சட்டையை சிறுவன் அணிந்திருப்பதும் கவித்துவ மொழிதல்கள் அதே பாடலில் ஒரு மலைமுகட்டின் சாயங்கால வெளிச்சத்தில் காமிராவுக்கு முதுகு காண்பித்த்வாறு அஸ்வினியுடன் குழந்தைகள் இருக்கும் அந்த காட்சி தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த காட்சித்துணிபு ( ஷாட்) என்றால் மிகையில்லை அசோக்குமாரின் வாழ்நாளின் மிகச்சிறந்த ஒளிப்பதிவு தருணம் இது.

சரத்பாபு ஆற்றங்கரையில் விஜயனிடம் நியாயம் கேட்க வரும்போது தமிழ் சினிமா ரசிகர்கள் காத்திருக்கும் சண்டைக்காட்சி தவிர்க்கப்பட்டுகட் அவே ஷாட்டில் ஒரு பையன் ஆற்று மணலில் இதை பார்ப்பதாக காண்பித்து பின் மீண்டும் காமிரா மெல்ல புல்வெளிகளிடமிருந்து விலகி வாயில் ரத்தமுடன் சரத்பாபு கைகழுவும் காட்சி காண்பிக்கும் போது இடையில் நடந்தவை நம்மால் ஊகிக்க முடிகிறது. இந்த சொல்லமால் சொல்லும் கவித்துவம் மூலம் தமிழ் சினிமா புதிய அழகியலை படத்தொகுப்புமூலம் புதிய பரிணாமத்துக்கு உயர்வது கண்கூடு. எடிட்டர் லெனின் இது போல பல இடங்களில்,ஹைகூ நிகழ்த்துகிறார்.

இக்காட்சியைத்தொடர்ந்து நான் உங்களை திருப்பி அடிச்சிருப்பேன் ஆனா லஷ்மி விதவையாவறதை நான் விரும்பல என சரத் பாபு சொல்லும் போது இதே வசனம் பிற்பாடு இன்னொரு படத்திலும் இருப்பது நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை.

விஜயன் அஸ்வினி இருவருமே இரண்டு எல்லைகள் கண்கள் மூலமே படத்தின் மிகச்சிறந்த அம்சமே ஒடுக்கப்பட்ட நாவித சமூகத்தைச்சேர்ந்த சாமிக்கண்ணுவை நாயகனாக உருவாக்கியிருப்பதுதான் .. ஆமாம் படத்தில் ஹீரோ போல ஆரம்பத்தில் தோன்றும் சரத்பாபு பாதியில் பயந்து ஓடுகிறார். மைத்துணியை கல்யாணம் செய்யும் சுந்தரும் கூட துணிச்சலாக விஜயனை எதிர்க்கவில்லை .

இன்னும் சொல்லப்போனால் கடைசியில் விஜயன் ஆற்றில் இறங்கும் போது காப்பற்றத்தான் பொகிறார். இரண்டு பெண்களும் கூட எதிர்க்க முடியாத ஏதிலிகளகா இருக்கும் போது கொடூரமான விஜயனை பஞ்சாயத்தில்லும் சரி இறுதிக்காட்சியில் ஆற்றில் மூழ்கடிக்க முடிவெடுப்பதுமாக கதையின் முக்கிய பங்காற்றும் ஒரே ஆண் மகனாக சாமிக்கண்ணுவை அதுவும் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச்சேந்ர்த ஒருவனை காட்டியிருப்பது படத்துக்கு காலம் கடந்த உன்னதத்தை உருவாக்கித்தருகிறது.

இறுதி பத்து நிமிடம் வரும் வரை படம் எதை நோக்கி பயணிக்கிறது என இலக்கில்லாமல் செல்வதும் ஒருகுறை.

பதினாறு வயதினிலே அழியாத கோலங்கள் போல கச்சிதமான காட்சிமொழியும் சேர்ந்திருந்தால் படம் நிச்சயம் ஒரு உலக சினிமாக்களின் தமிழ் பங்களிப்பாக இடம்பிடித்திருக்கும் ..