இலங்கையில் பிறந்து கேரளாவில் வளர்ந்து தமிழ் சினிமாவில் ஜொலித்த நடிகை சுஜாதா

35

நடிகை சுஜாதா தென்னிந்தியத் திரைப்பட நடிகை . இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 70 – 80களில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர்.

சுஜாதா, 1952-ம் ஆண்டில், டிசம்பர் 10-ந் தேதி, இலங்கையில் பிறந்தார். அவருடைய சொந்த ஊர், கேரள மாநிலம் காலே. அங்குள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தார். 1977-ம் ஆண்டில் சுஜாதா, ஜெயகர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஜித் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் இருக்கிறார்கள். திவ்யா, டாக்டருக்கு படித்து இருக்கிறார்.

போலீஸ் ஸ்டேஷன்’ என்ற மலையாள நாடகத்தில் முதன்முதலாக நடித்தார். 1971-ம் ஆண்டில் இயக்குநர் ஜோஸ் பிரகாஷ், `தபஷ்னி’ என்ற மலையாள படத்தில் சுஜாதாவை அறிமுகம் செய்தார். 1972-ம் ஆண்டில், கே. பாலசந்தர் இயக்கத்தில் ` அவள் ஒரு தொடர்கதை ‘ படத்தில் அறிமுகமானார். அந்த படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து சுஜாதா தமிழ் பட உலகில் பிரபலமானார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.

தெலுங்கு, தமிழ், மலையாளர் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகி உள்ளிட்ட வேடங்களில் சுஜாதா நடித்துள்ளார். `வரலாறு’ படத்தில், அஜீத்குமாரின் அம்மாவாக நடித்து இருந்தார். அதுதான் அவர் நடித்த கடைசி படம். அதன்பிறகு சுஜாதா நடிக்கவில்லை.

மறைவு

இருதய நோயால் அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. 6-4-2011 பிற்பகல் 2.30 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் மரணம் அடைந்தார்.