கோலிவுட் திரைப் பிரபலங்கள் விரும்பும் கார்கள் !

11

1. ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார்ட இல்லாத கார்களா ? ன்னு நமக்குள்ளேயே கேள்வி எழலாம். ஒரு ஸ்டார் எத்தன கார் வைச்சிருந்தாலும் அவங்க விரும்பி பயணம் போற கார் ஒன்னு இருக்கு.

அந்த வகையில சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிம்எம்டபிள்யூ கார்ல தான் அதிகம் விரும்பி போவாராம்.

2. கமல்ஹாசன்

தற்போதைக்கு ஆடி ஆர் 8 மற்றும் ஹம்மர் ஹெச் 3 ஆகிய கார்களை கமல்ஹாசன் பயன்படுத்தி வருகிறார்.இந்த இரண்டு கார்களும் 2 கோடி ரூபாய் மதிப்புள்ளது.

3. தளபதி விஜய்

சமுதாயத்தில் பிரபலமானவர்களுக்கு மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் விற்கப்படும்.அந்த வகையில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் “பேண்டம்” ரக காரை விஜய் வைத்துள்ளார்.இதன் விலை 3 கோடிகள்.

4. தல அஜித்

தல அஜித்குமார் ஒரு கார் ப்ரியர் என்றாலும் இவரும் அதிகம் விரும்பி பயணம் போறது பிஎம்டபிள்யு மற்றும் வால்வோ தான்.

5. நடிகர் சூர்யா

தற்போது சூர்யா ’ஆடி’ ரக காரை பயன்படுத்தி வருகிறார்.ஆனால் இந்த கார் அவரது சொந்த கார் இல்லை.பிரபல நிறுவனம் ஒன்று,சூர்யாவுக்கு ஆடி காரை பரிசாக அளித்துள்ளது.இதன் விலை 85 லட்சம்.

6. சியான் விக்ரம்

நடிகர் விக்ரம் ஆடி நிறுவன கார் ரகங்களின் ரசிகர்.தற்போது ஆடி நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் ரக காரான “ஆர் 8” காரை விக்ரம் பயன்படுத்தி வருகிறார்.இதன் விலை 2 கோடி.

7. நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷும் ஆடி நிறுவனப் பிரியர் தான்.ஏற்கனவே விலையுயர்ந்த கார்களான பெண்ட்லி மற்றும் ஜாகுவார் ரக கார்களை தனுஷ் வைத்துள்ளார்.தற்போது ஆடி காரை பயன்படுத்தி வருகிறார்.இதன் விலை 1.7 கோடி.

8. நடிகர் சிம்பு

ஆரம்பத்தில் பிஎம்டபிள்யு காரில் பயணம் செய்தாலும் தற்போது சிம்பு பென்ட்லி காரில் பயணம் செய்கிறார்.

9. நடிகை திரிஷா

பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் 5 சீரிஸ் காரை நடிகை திரிஷா பயன்படுத்தி வருகிறார்.பி.எம்.டபிள்யூவுக்கு பிறகு மெர்சிடஸ் நிறுவன காரை அவர் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.இதன் விலை 1 கோடி.

10. நடிகை நயன்தாரா

பென்ஸ் நிறுவனத்தின் அதிவிலை உயர்ந்த மாடல் காரில் தான் செல்கிறார்.

11. உதயநிதி ஸ்டாலின்

நடிகரும்,தயாரிப்பாளருமான வெளிநாட்டு இறக்குமதி ரக காரான,விலையுயர்ந்த “ஹம்மர்” காரை பயன்படுத்தி வருகிறார்.

12. நடிகர் சந்தானம்

தற்போதைய சூழலில் மிகச் சிறந்த எஸ்.யூ.வி கார்களில் ஒன்றாக கருதப்படும் ”ரேன்ஞ் ரோவர் எவாக்யூ” காரை நடிகர் சந்தானம் வைத்துள்ளார்.இதன் விலை 40 லட்சம்.

13. நடிகர் சிவகார்த்திகேயன்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் வெற்றி பெற்றதையடுத்து அந்த படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கு ஒரு ஆடி கார் அன்பளிப்பு செய்தார். இந்த காரை தான் பயன்படுத்தி வருகிறார் சிவா.

14. நடிகர் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி பிஎம்டபிள்யூ செவன் சீரியஸ் காரில் பயணம் செய்கிறார்.

15. இசையமைப்பாளர் இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள், வெள்ளை கலர் மெர்சிடஸ் பென்ஸ் காரில் பயணம் செய்கிறார்.

16. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்

இசையமைப்பளார் ஏ.ஆர்.ரகுமான், ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம் செய்கிறார்.

17. இசையமைப்பளார் ஹாரிஸ் ஜெயராஜ்

ஸ்போர்ட்ஸ் ரக கார்களின் தலைவனான “லம்போர்கினி” நிறுவன காரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வாங்கியுள்ளார்.”Lamborghini Aventador LP700” என்ற இந்த காரின் விலை மட்டும் 5 கோடிகள்!

18.இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா

ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் ”N420 vantage” என்ற சொகுசு காரை,யுவன் ஷங்கர் ராஜா பயன்படுத்தி வருகிறார்.இதன் விலை 2 கோடிகள்!