ரஜினிகாந்த் படங்களில் கண்டிப்பாக பாம்பு சீன் இருக்கும்… கவனித்துள்ளீர்களா ?

52

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படங்களில் ஒன்றான சந்திரமுகி படத்தில் இறுதிவரை ஒரு பாம்பு வருமே பார்த்துள்ளீர்களா? அந்த பாம்பு எதற்காக என்ற சந்தேகம் பல காலமாக உள்ளது. இப்போது எதற்கு இந்த சந்தேகம் என நீங்க கேட்கவருவது புரிகிறது. விஷயம் இருக்கு.

சந்திரமுகி படத்தில் அந்த பாம்பின் ரோல் எதற்கு என்றால், இதிகாசங்கள், கற்பனை கதைகளில் புதையல் மற்றும் பொக்கிஷங்களை பாதுகாக்க ஒரு பா ம்பு எப்போதுமே இருக்கும் என கூறுவதுண்டு.

ஏன் கேரளா பத்மனாபசாமி கோவிலில் உள்ள ம ர்ம கதவுகள் சில திறக்கப்பட்ட போது கடைசி கதவு மட்டும் இன்றும் திறக்கப்படாமல் உள்ளது. அதனை எளிதில் திறக்க முடியாது. அதனுள் உள்ள பொக்கிஷத்தை பாதுகாக்க விஷ ஷர்ப்பம் உள்ளதாக கூறப்படுகிறது.

Your Digital PR

உண்மையில் பாம்பு இருக்கிறதா இல்லையா என்பது சந்தேகமே! ஆனால் பாம்பு தொடர்பான கதைகளை கேட்கும் போது கண்டிப்பாக சுவாரஸ்யம் தொற்றிக்கொள்ளும். ஏதோ பெரிய விஷயம் உள்ளே இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்கும். சந்திரமுகி படத்தில் சந்திரமுகி என்ற பெயரே படம் குறித்த ஆர்வத்தை தொற்றிக்கொள்ள செய்யும்.

படத்தில் நிஜ சந்திரமுகியை காட்டும் முன் அடிக்கடி இந்த பாம்பை காட்டுவார்கள். அதுவும் சுவாரஸ்யம் ஏற்பட வேண்டிதான். சந்திரமுகி போனதும் பாம்பும் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக நாம் நினைத்து கொள்ளும்படி படத்தின் முடிவு இருக்கும்.

பே ய் என்றாலும் ப யம், பாம்பு என்றாலும் பயம். இரண்டுமே உ ளவியல் ரீதியாக ஆர்வத்தையும் ப யத்தையும் ஏற்படுத்தும் ஒன்று. படத்தில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் இதெல்லாம் அவசியம் தான்.

இதற்கு எல்லாம் மேலாக, ரஜினி படம் என்றாலே கண்டிப்பாக பாம்பு இருக்குமாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களான தம்பிக்கு எந்த ஊரு, படையப்பா, அண்ணாமலை போன்ற படங்களில் வரும் பாம்பு சீன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரஜினி படத்தில் பாம்பு வந்தால் சூப்பர் ஹிட் அடிக்கும் என்ற சென்டிமென்ட் கோடம்பாக்கம் பக்கம் பலவருடமாக பேசப்படும் விஷயமாகும்.

Your Digital PR