ரஜினி, கமல் இணைந்து நடித்த கடைசிப்படம் நினைத்தாலே இனிக்கும்

16

படத்தில் கதையெல்லாம் ஒன்றும் இல்லை. ரசிகர்கள் சந்தோஷமாக படம் பார்க்க வேண்டும் என ‘உயர்ந்த’ எண்ணத்துடன் எடுக்கப்பட்ட படம், நினைத்தாலே இனிக்கும். ரஜினியும், கமலும் இணைந்து நடித்த கடைசி படம். அந்தகால இளைஞர்களிடம், புதிய உடை கலா சாரத்தை உருவாக்கியது இந்த படத்தின் இருந்து தான் பரவ ஆரம்பித்தது.

நினைத்தாலே இனிக்கும் கதாநாயகர்களின் உடைகள், அன்றைய இளைஞர்களின் விருப்பமான ஒன்றாக இருந்தன. பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் கதை, வசனத்தில் உருவானது. இப்படத்தில், அவருக்கு நிறைய, ‘அனுபவங்கள்’ ஏற்பட்டது, தனிக்கதை.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும், ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது. தெலுங்கில், அந்தமானிய அனுபவம் எனும் பெயரில் வெளியானது. இத்திரைப்படத்தின் பெரும்பகுதி, சிங்கப்பூரில் படமாக்கப்பட்டது. மெல்லிசைக் குழுவைச் சேர்ந்த கமல், ரஜினி ஆகியோர், இசை நிகழ்ச்சிக்காக, சிங்கப்பூர் செல்கின்றனர். அங்கு, ஜெயபிரதாவை சந்திக்கின்றனர். ஒரு கடத்தல் முயற்சி, நாயகி மரணம், 10க்கும் மேற்பட்ட பாடல்கள்… அவ்வளவு தான் படம்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன் பாடல்கள் எழுதினார். ‘எங்கேயும் எப்போதும், சிவனே மந்திரம் சிவசம்போ, நம்ம ஊரு சிங்காரி, யாதும் ஊரே யாவரும் கேளிர்’ போன்ற பாடல்கள், பட்டையை கிளப்பின. தமிழ் சினிமாவையும், ரசிகர்களையும் புரிந்து கொள்ளவே முடியாது என்பதற்கு, இப்படம் ஒரு உதாரணம். குதுாகலமாக பார்க்கலாம்… நினைத்தாலே இனிக்கும்!