மரியான் படத்தில் வரும் சோனப்பரியா பாடலுக்கு அர்த்தம் தெரியுமா…?

34

தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் படத்தில் கலக்கலான ஒரு பாடல் வரும் ‘சோனாப்பரியா’ என்று. தனுஷ் மற்றும் பார்வதியின் ஜாடையான பாடல் வரிகள் பார்க்கவே குதூகலமாக இருக்கும். இத்தனை நாட்களாக ‘சொன்னா புரியாதா?’ என்பது தான் வேகமாக பாடும் போது, ‘சோனாப்பரியா’ என்பதாக உச்சரிக்கபடுகிறது என நினைத்து கொண்டிருந்தோம். பின்னர் தான் புரிந்தது அதன் உண்மையான உச்சரிப்பே ‘சோனாப்பரியா’ என்பது தானாம்.

சரி இதன் அர்த்தம் என்னவாக இருக்கும்? அர்த்தம் இல்லாமலா பாடலாசிரியர் பாடலை இயற்றி இருப்பாரா? தற்காலத்தில் அர்த்தம் எதுவும் இல்லாமலே பாடலை இயற்றுவது ட்ரெண்டாகி விட்டது. அப்படித்தான் இந்த ‘சோனாப்பரியா’ வார்த்தைக்கும், பொருள் இருக்காது என எண்ணிக்கொண்டு இருந்தால், இதற்கும் பொருள் உண்டாம்.

சோனாப்பரியா என்றால் கடல் தேவதை என பொருளாம். மீனவராக உள்ள தனுஷ் தனது கஷ்டத்தை எல்லாம் கடல் தேவதையிடம் சொல்லி வேண்டி, எனக்கு உதவிக்கு வருவாயா சோனாப்பரியா என கேட்கும்படி பாடல் அமைந்திருக்கும். இதன் அர்த்தத்தை கவிஞர் வாலியே ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார்.

கடல் தேவதை என்பது உண்மையில் உள்ளதா? இல்லை கற்பனை பாத்திரமா? என தெரியவில்லை. ஆனால் செய்யும் தொழிலே தெய்வம் என்பது மட்டும் உண்மையே! அதனை வைத்தே வாலி இந்த பாடலை இயற்றியிருப்பார். ஆனால் இதன் பொருள் தெரியாமலே பாடிக்கொண்டிருக்கிறோம். இந்த பாடலை கேட்டாலே ஒருவித புத்துணர்வு நம்மை தொற்றிக்கொள்ளும். இந்த பாடல் முழுவதையும் கேளுங்க, வாலியின் வார்த்தை ஜாலங்கள் வியக்க வைக்கும்.

Your Digital PR