தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கருக்கு பெரும் வெற்றி கொடுத்த குழந்தையும் தெய்வமும்

பார்வையாளர்களின் விமர்சனம் தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கருக்கு பெரும் வெற்றி கொடுத்த குழந்தையும் தெய்வமும் 0.00/5.00


குழந்தையும் தெய்வமும் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் மற்றும் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜமுனா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கருக்கு பெரும் வெற்றியைக் கொடுத்தப் படம், குழந்தையும் தெய்வமும்.எரிக் காஸ்ட்னர் எழுதிய லிஸா அண்டு லாட்டி நாவல், 1961ல் வால் டிஸ்னி தயாரிப்பில், த பேரண்ட் ட்ராப் என்ற ஹாலிவுட் படமாக வெளிவந்து சூப்பர் ஹிட்டானது.

இப்படத்தை தழுவி ஜாவர் சீதாராமன் திரைக்கதை எழுத, கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் ஏ.வி.எம்., தயாரிப்பில், 1965ம் வெளியானது, குழந்தையும் தெய்வமும்.காதல் திருமணம் செய்த தம்பதிக்கு, இரட்டை பெண் குழந்தைகள் பிறக்கின்றன. சதியால், தம்பதி பிரிந்துவிடுகின்றனர். ஆளுக்கு ஒருவர் என குழந்தைகள் வளர்கின்றன. குழந்தைகளின் ஆள் மாறாட்டத்தால், தம்பதி மீண்டும் ஒன்று சேர்கின்றனர் என்பது தான் கதை.

சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது, இப்படத்தில் நடித்த குட்டி பத்மினிக்கு கிடைத்தது.எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், ‘அன்புள்ள மான்விழியே, கோழி ஒரு கூட்டிலே, குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று’ போன்ற பாடல்கள் இன்றும் நேயர் விருப்பமாக உள்ளன.இப்படத்திற்கு கிடைத்த வெற்றியால், அடுத்தடுத்த ஆண்டுகளில், தெலுங்கு, ஹிந்தி, கன்னடத்தில், ரீமேக் செய்யப்பட்டு, அதிலும், வெற்றி வாகை சூடியது.

கதை எங்கிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும், அதை நம் கலாசாரத்திற்கு ஏற்றவாறு திரைக்கதையின் பின்னணி அமைக்கப்பட்டிருந்ததால், படம், இங்கும் வெற்றி பெற்றது. குடும்பத்தோடு அமர்ந்து, பார்க்க வேண்டிய நல்லபடம், குழந்தையும் தெய்வமும்.