நடிகைகளை திருமணம் செய்துகொண்ட இயக்குனர்கள் !

13

1. நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சி

நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சி அவர்களை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

இவர்களை பெயர்களை கொண்டே அவ்னி சினி மேக்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை இவர்கள் நடத்தி வருகிறார்கள்.

2. நடிகை ரோஜா, இயக்குனர் செல்வ மணி

ரோஜாவும், செல்வமணியும் நீண்ட காலம் காதலித்து வந்தனர். ஆனால், திருமண பந்தத்தில் இணைய இவர்கள் இருவரும் நிறைய நேரம் எடுத்து யோசித்து பின்னரே இணைந்ததாக அறியப்படுகிறது.

இவர்கள் இருவரும் கடந்த 2002ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள்.

ரோஜா தெலுங்கு அரசியலில் முழுநேர பணியாக செய்து வருகிறார். அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்சிகளிலும் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. நடிகை அமலா பால் – இயக்குனர் ஏ.எல். விஜய்

எ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்தார் அமலா பால். அதில் தெய்வ திருமகள் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது இருவருக்குள்ளும் காதல் பூத்தது. பிறகு பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் 2014ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.

மிக இளம் வயதில், காதலித்த வேகத்தில் இருவரும் திருமணம் செய்துக் கொண்டார். அதே வேகத்தில் இந்த ஜோடி விவாகரத்தும் செய்துக் கொண்டது. திருமணமான இரண்டே ஆண்டுகளில் இவர்கள் விவாகாரத்து பெற்று பிரிந்தனர்.

4. இயக்குனர் ராஜ குமாரன் – நடிகை தேவயாணி

ராஜகுமாரன் உடன் ஏழு வருடங்கள் படங்களில் பணியாற்றியவர் தேவயாணி. இவர்களது பெற்றோர் காதலை ஏற்கவில்லை என்பதால், வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துக் கொண்டனர்.
இவர்கள் ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்துக் கொண்டனர்.

இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்று இரண்டு குழந்தைகள். தற்சமயம் தேவயாணி சென்னை அண்ணா சாலையில் இருக்கும் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்று அறியப்படுகிறது.

5. நடிகை ஷோபா இயக்குனர் பாலு மகேந்திரா

நடிகை ஷோபா பாலு மகேந்திரா அவர்கள் ஒளிப்பதிவு மற்றும் இயக்கிய பல படங்களில் நடித்திருக்கிறார். பாலு மகேந்திராவின் கோகிலா என்ற படத்தில் முக்கிய வேடத்தில் ஷோபா நடித்திருந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக பாலு மகேந்திரா அவர்களை திருமணம் செய்துக் கொண்ட பிறகு தனது 17வது வயதில் ஷோபா தற்கொலை செய்து இறந்துவிட்டார்.

6. நடிகை ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு பட இயக்குனர் கிருஷ்ணா வம்சி

மிக இளம் வயதில் இருந்து நடித்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தனது 13, 14 வயதில் இருந்தே சினிமா துறையில் இருக்கிறார் என்று அறியப்படுகிறது.

பல விருதுகள் வாங்கி குவித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு பட இயக்குனரான கிருஷ்ணா வம்சியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

இவர்களுக்கு ரித்விக் என்ற மகன் இருக்கிறார். காதலித்து வந்த போது ஓராண்டு காலம் சண்டையிட்டு பேசாமல் இருந்ததாகவும், அதன் பிறகு மீண்டும் காதலில் இணைந்து திருமணம் செய்துக் கொண்டதாகவும் கூறும் ரம்யா கிருஷ்ணன்.

இந்த காலத்தில் எப்படி பிரேக்-அப் ஆனால் அப்படியே விட்டுவிடுகிறார்கள். இது விசித்திரமாக இருக்கிறது என்று ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.

7.நடிகை சுகாசினி – இயக்குனர் மணி ரத்னம்

சுகாசினி சாருஹாசனின் மகள். இவரது பூர்வீகம் பரமக்குடி. இவரும் இந்தியாவின் தலைச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னமும் கடந்த 1988ல் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு நந்தன் என்ற மகனும் இருக்கிறார். தன்னை ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாத நபராக வெளிப்படுத்திக் கொள்ளும் சுகாசினி, தனக்கு கோவிலுக்கு சென்று கடவுளை கும்பிடவும், தன் குடும்பத்திற்கு சந்தோஷத்தை அளிக்க வேண்டும் கெஞ்சவும் விருப்பம் இல்லை என்று கூறி இருக்கிறார்.

8. நடிகை சோனியா அகர்வால் – இயக்குனர் செல்வராகவன்

பஞ்சாபை சேர்ந்தவர் சோனியா அகர்வால். இவரை அறிமுகம் செய்ததே செல்வராகவன் தான். இவரது இயக்கத்தில் காதல் கொண்டேன் மற்றும் 7ஜி ரெயின்போ காலனி மற்றும் புதுப்பேட்டை என்ற வெற்றிப் படங்களில் நடித்திருந்தார் சோனியா. இந்த காலக்கட்டத்தில் தான் இவர்கள் இருவருக்கும் நடுவே காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் 2006ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். ஆனால், இவர்களது இல்லற வாழ்க்கை நான்கே ஆண்டுகளில் முடிவுக்கு வந்துவிட்டது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.

9. நடிகை லிசி – இயக்குனர் ப்ரியதர்சன்

ப்ரியதர்ஷன் பிரபல நடிகை லிஸியை காதலித்து திருமணம் செய்திக் கொண்டார். இவர்கள் இருவரும் 1990ல் இல்லற பந்தத்தில் இணைந்தனர். திருமணத்திற்கு பிறகு லிஸி நடிப்பை விட்டு ஒதுங்கினார். இவர்கள் லக்ஷ்மி என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்தனர். மேலும், இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தார்.

10. நடிகை சரண்யா – இயக்குனர் பொன்வண்ணன்

பல படங்களில் துணை நடிகராகவும், இயக்குனராகவும் தமிழ் சினிமா துறையில் பணியாற்றி இருக்கிறார் பொன்வண்ணன். இவர் தனது சக நடிகையான சரண்யா அவர்களை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். குறிப்பிட்ட காலம் நடிப்புக்கு இடைவேளை விட்டிருந்த சரண்யா மீண்டும் அம்மா நடிகையாக பெரும் புகழ் பெற்றிருக்கிறார். தற்போது அம்மா வேடங்களுக்கு அதிக சம்பளம் வாங்கு நடிகை என்றும் கூறப்படுகிறார்.

11. நடிகை சீதா – இயக்குனர் பார்த்திபன்

சீதா தமிழ் நடிகர் மோக பாபு மற்றும் கன்திரவதியின் மகள். இவர் இயக்குனர் நடிகர் பார்த்திபன் மீது காதல்வயப்பட்டு 1990ல் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் 2001ம் ஆண்டு விவாரகத்து செய்துக் கொண்டனர். பிறகு சின்னத்திரை நடிகர் சதீஷ் என்பவரை 2010ல் திருமணம் செய்துக் கொண்ட சீதா அவரையும் 2016ல் விவாகரத்து செய்துவிட்டார்.

12. நடிகை பூர்ணிமா – இயக்குனர் பாக்யராஜ்

பாக்யராஜ் கோபிசெட்டிபாளையம் பூர்வீகமாக கொண்டவர். முதலில் பர்வீனா என்ற நடிகையை திருமணம் செய்திருந்தார் பாக்யராஜ் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். பிறகு 1984ல் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்துக் கொண்டார். இந்த ஜோடிக்கு சாந்தனு மற்று சரண்யா என்று இரண்டு குழந்தைகள். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் நடிகர், நடிகையாக நடித்துள்ளனர்.

13. நடிகை ப்ரீத்தி – இயக்குனர் ஹரி

நடிகர் விஜய குமாரின் மகள் ப்ரீத்தியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இயக்குனர் ஹரி. வேகவேகமாக படம் எடுக்கும் திறன் கொண்டவர் ஹரி.

இவரது வேலை மட்டுமல்ல படங்களும் வேகமாக தான் நகரும். இந்த ஜோடிக்கு மூன்று மகன்கள். மூன்றாவது மகன் இவர் சேவல் என்ற படத்தை இயக்கி கொண்டிருந்த காலக்கட்டத்தில் பிறந்தார்.