நாட்டாமை படத்தில் வரும் மிக்சர் காமெடி கதாபாத்திரம் உருவான பின்னணி

34

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாக இயக்குநர்களில் ஒருவர் கே.எஸ்.ரவிகுமார். இவர் இயக்கத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படம் ‘நாட்டாமை’. சரத்குமார், மீனா, விஜயகுமார், குஷ்பு, மனோரமா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

கவுண்டமணி – செந்தில் காமெடிக் காட்சிகள் என்றாலே மிகவும் பிரபலம். அதிலும் இந்தப் படத்தில், குறிப்பாக கவுண்டமணிக்கு பெண் பார்க்கப் போகும் போது பெண்ணின் அப்பா என்று ஒருவர் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்.

இந்தக் கதாப்பாத்திரத்தை வைத்து இப்போதும் பல மீம்ஸ்கள் உருவாக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த கேரக்டரின் சுவாரஸ்யமான பின்னணி குறித்து இயக்குநர் கே. எஸ்.ரவிக்குமார் தற்போது பகிர்ந்துள்ளார்.

அதில், “முதலில் அந்தக் கேரக்டருக்கு வேறொருவரைத் தான் முடிவு செய்திருந்தார்களாம். அவர்கள் அழைத்துச்சென்ற கம்பெனி நடிகர்கள் மற்றும் கோபிச்செட்டிப்பாளையத்தில் இருப்பவர்கள் யாருமே செட் ஆகவில்லை என்பதனால், படப்பிடிப்புத் தளத்தில் ஸ்விட்ச் போர்டு அருகில் உட்கார்ந்து பணிபுரிபவர் இவரை நடிக்க வைத்தார்களாம்.

ஆனால் அவரோ உடனே பயந்துபோனாரம். சும்மா உட்காருங்க என்று சொல்லி உட்கார வைத்திருக்கிறார்கள். “சும்மா உட்கார்ந்திருந்தால் ஏதாவது கேட்டால் பதில் சொல்ல வேண்டுமே என்று கவுண்டமணியும் செந்திலும் சொல்லியிருக்கிறார்கள். அதனால் உடனே கையில் ஒரு மிக்சர் தட்டு கொடுத்து, ‘மிக்சர் சாப்பிட்டுட்டு இருப்பா, உனக்கு வசனமே கிடையாது’ … “என்ன கேட்டாலும் மிக்சர் சாப்பிடு” என்று சொல்லி அந்த கேரக்டரை உருவாக்கியிருக்கிறார்கள்.

மேலும், ” டயலாக் அவருக்கு வராது என்பதால் அவருக்கு மிக்சர் கொடுத்தேன். அதைப் பார்த்தால் இப்போது மிக்சர் மாமா என்று பரவிவிட்டது. அந்த வசனங்கள் எல்லாம் கவுண்டமணியால்தான் இன்னும் ஃபேமஸ் ஆச்சு”. என்று கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.