சுவாரஸ்யமான கதைக்களத்தில் பாலச்சந்தர் புகுந்து விளையாடிய இரு கோடுகள்

16


மக்களிடம், ஒரு பிரச்னையை மறக்க செய்ய வேண்டும் என்றால், அதை விட, பெரிய பிரச்னையை ஏற்படுத்தினால் போதும்’ என்ற, அரசியல் தத்துவம் தான், இப்படத்தின் கதை கரு. ஜோசப் ஆனந்தன் எழுதிய, இருகோடுகள் நாடகம், மேடைகளில் பெரும் வெற்றி பெற்றிருந்தது. அதை, திரைப்படமாக்க, ‘கலாகேந்திரா’ நிறுவனம் முடிவு செய்தது. திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை, பாலசந்தர் ஏற்றார்.


தம்பதியரான ஜெமினி கணேசனும், சவுகார் ஜானகியும் விவாகரத்து செய்து, பிரிந்து வாழ்வர். ஜெமினி கணேசன், ஜெயந்தியை இரண்டாவது திருமணம் செய்து கொள்வார். கலெக்டர் அலுவலகத்தில், குமாஸ்தாவாக ஜெமினி கணேசன் வேலை பார்ப்பார். சவுகார் ஜானகி மேற்படிப்பு முடித்து, கலெக்டராக அங்கு வருவார். மனைவி, கலெக்டர்; கணவர், குமாஸ்தா. சுவாரஸ்யமான கதைகளத்தில், புகுந்து விளையாடி இருப்பார், இயக்குனர் பாலசந்தர்.


வி.குமார் இசையமைப்பில், ‘புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன், நான் ஒரு குமாஸ்தா…’ போன்ற பாடல்கள், பெரும் வெற்றி பெற்றன. மாநில மொழிப்படங்களில் சிறந்த படம் என, ஜனாதிபதியின் பரிசை, இப்படம் பெற்றது. வசூலிலும், அள்ளி குவித்தது. பாலசந்தரின் சிறந்த படங்கள் வரிசையில், இரு கோடுகள் முக்கிய இடம் பெறும். குடும்பத்தோடு அமர்ந்து, எப்போதும் பார்க்கலாம்.