சினிமா மற்றும் அரசியலில் கொடிகட்டி பறந்த ஜெயலலிதா பற்றிய சில சுவாரஸ்ய துளிகள்

45

* ஜெ ஜெயலலிதா நடித்த முதல் திரைப்படம் “எபிஸில்” என்ற ஆங்கில திரைப்படமாகும். வெளியான ஆண்டு 1961.

* நாயகியாக நடித்த முதல் தென்னிந்திய திரைப்படம் “சின்னடா கொம்பே” என்ற கன்னடப் படமாகும். இயக்குநர் பி ஆர் பந்துலு. படம் வெளியான ஆண்டு 1964. நாயகன் நடிகர் கல்யாண் குமார்.

* தமிழில் நாயகியாக அறிமுகமான திரைப்படம் “வெண்ணிற ஆடை”. இயக்குநர் ஸ்ரீதர். படம் வெளியான ஆண்டு 1965.

* “மனுஷலு மமதலு” என்ற தெலுக்கு படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். படம் வெளியான ஆண்டு 1966.

* எம்.ஜி.ஆரோடு இவர் நாயகியாக இணைந்து நடித்த முதல் திரைப்படம் “ஆயிரத்தில் ஒருவன்” இயக்குநர் பி ஆர் பந்துலு. படம் வெளியான ஆண்டு 1965.

* சிவாஜி கணேசனோடு இவர் நாயகியாக இணைந்து நடித்த முதல் திரைப்படம் “கலாட்டா கல்யாணம்”. 1967 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் சி வி ராஜேந்திரன்.

* ஜெயலலிதாவின் 100வது திரைப்படம் “திருமாங்கல்யம்”. 1974 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் ஏ வின்சென்ட். நாயகன் முத்துராமன்.

* “அடிமைப்பெண்” திரைப்படத்தில் வரும் “அம்மா என்றால் அன்பு” என்ற பாடலை முதன் முதலாக தனது சொந்தக் குரலில் பின்னணிப் பாடியிருந்தார் ஜெ ஜெயலலிதா. பாடலுக்கு இசையமைத்தவர் கே வி மகாதேவன். படம் வெளியான ஆண்டு 1969.

* இயக்குநர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் இவர் நடித்திருந்த ஒரே திரைப்படம் “மேஜர் சந்திரகாந்த்”.

* ஹிந்தியில் நாயகியாக அறிமுகமாகி நடித்த ஒரே திரைப்படம் “இஸ்ஸத்”. நாயகன் தர்மேந்திரா.

* இவர் நடித்த 142 படங்களில் 77 திரைப்படங்கள் 100 நாட்களை கடந்து ஓடியவை. 18 திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டிருக்கின்றன.

* இவர் நாயகியாக நடித்து வெளிவந்த கடைசி தமழ் திரைப்படம் “நதியைத் தேடிவந்த கடல்”. 1980 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தை அன்றைய அறிமுக இயக்குநரான பி லெனின் இயக்கியிருந்தார். நடிகர் சரத்பாபு நாயகனாக நடித்திருந்தார். மேலும் இளையராஜாவின் இசையில் ஜெ ஜெயலலிதா நடித்திருந்த ஒரே திரைப்படமும் இதுவே.

* 1992 ஆம் ஆண்டு ஜெ ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்றபின் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இயக்குநர் விசு இயக்கிய “நீங்க நல்லா இருக்கணும்” என்ற திரைப்படத்தில் முதல்வராகவே திரையில் தோன்றி மகிழ்வித்தார்.

* 1982 ஆம் ஆண்டு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினரானார்.

* 1983 ஆம் ஆண்டு ஜனவரியில் எம் ஜி ஆரால் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரானார்.

* 1984 – 1989 கால கட்டங்களில் ராஜ்ய சபா உறுப்பினராக பணியாற்றினார்.

* 1987 ஆம் ஆண்டு எம் ஜி ஆரின் மறைவிற்குப் பின் அதிமுக., கட்சி இரண்டாக பிரிந்தது. கட்சியின் சின்னமான “இரட்டை இலை” தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது.

Your Digital PR

* 1989 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு, எம் எல் ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜெயலலிதா.

* முதல் பெண் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் என்ற பெருமை பெற்றவர் ஜெ ஜெயலலிதா.

* 1989 ஆம் ஆண்டு, இரு அணியாக பிரிந்திருந்த அ தி மு க, ஒரு அணியாக இணைந்து, கட்சியின் பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜெ ஜெயலலிதா.

கட்சியின் சின்னமான “இரட்டை இலை”, மீண்டும் 1989 ஆம் ஆண்டு கிடைக்கப் பெற்றது.

* 1991 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவின் தலைமையில் அ தி மு க கூட்டணி, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 225 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றது. காங்கேயம், பர்கூர் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார் ஜெயலலிதா.

* 1991 ஆம் ஆண்டு ஜுன் 24 அன்று முதல் முறையாக தமிழக முதல்வரானார். சிறிய வயது முதல்வர் என்ற பெருமையோடு, இரண்டாவது பெண் முதல்வர் என்ற பெருமைக்கும் உரியவரானார்.

* ஐந்து முறை தமிழக முதல்வராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்கு உரியவர் ஜெயலலிதா.

Your Digital PR