கால்ஷுட் என்றால் என்ன ? ஏவி.எம்.சரவணன் விளக்கம்

தமிழ் சினிமாவில் இன்று நடிகர், நடிகைகளைிடையே ஏற்படும் பெரும் பிரச்சனை கால்ஷுட். குறிப்பிட்ட தேதியில் பட ஷுட்டிங் நடக்காமல் தள்ளி போனதோ அல்லது பட ஷுட்டிங் தேதியில் நடிகர், நடிகைகள் குறிப்பிட்ட தேதியில் நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் போனதோ வாங்கிய கால்ஷுட் விரயம் ஆகும்போது பிரச்சனைகள் பூதாகரமாக வெடிக்கின்றன.

அப்படிப்பட்ட கால்ஷுட் குறித்து திரைப்பட தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் தன்னுடைய சினிமா அனுபவத்தில் ஏற்பட்ட கால்ஷுட் குறித்து விளக்கமளித்துள்ளார்.

ஏவி.எம்.சரவணன் சார், ‘உலகம் பிறந் தது எனக்காக’ படத்தோட வேலை களை ஜனவரியில தொடங்குறோம். ஏப்ரல்ல ரிலீஸ் பண்ணணும்!’ என்றார். அதற்கு சத்யராஜ், ‘நிறைய படங்கள் இருக்கு சார். ஏப்ரல்ல ரிலீஸ் செய்றது கொஞ்சம் கஷ்டம்?’ என்று தயங்கினார். அதற்கு சரவணன் சார், ‘நீங்களும், முத்துராமனும் பேசி ஒரு முடிவு எடுங்க? ’ என்றார்.

சத்யராஜ் என்னிடம் வந்து, ‘சரவணன் சார் சொல்றமாதிரி படத்தை ரிலீஸ் பண்ணணும்னா, நான் கொடுக்குற தேதிகள்ல பகல் நேரத்தோட இரவுலயும் ஷூட் பண்ணாத்தான் சரியா வரும்’ என்றார். அதற்கு நான், ‘உங்களுக்கு நைட் ஷூட் ஓ.கே என்றால் எங்கள் யூனிட்டும் ரெடி’ என்றேன்.

கால்ஷீட்.. கால்ஷீட் என்று சினிமாவில் பேசுகிறோமே? அது என்ன தெரி யுமா? படப்பிடிப்பு காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடந்தால், அது ஒரு கால்ஷீட். அதேமாதிரி, மதியம் 2 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடந்தால் அது ஒரு கால்ஷீட். இரவு 9 மணிக்கு தொடங்கி அதிகாலை 2 மணி வரை நடந்தால் அது ஒரு கால்ஷீட். அதுவே, காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தால், அது ஒன்றரை கால்ஷீட்.

சத்யராஜ் பகல் ஷூட்டிங் போக, இரவு நேர கால்ஷீட்டிலும் நடிக்க ஒப்புக்கொண்டதால் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை படப்பிடிப்பு நடத்தி, பிறகு இரவுநேர படப்பிடிப்பு தொடங்கி அதிகாலை 2 மணிக்கு முடிப்போம். ஆக மொத்தம் இரண்டரை கால்ஷீட். அப்படி வேலை செய்து படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்தோம்.

படப்பிடிப்பில் இரவு 11 மணி ஆனதும் சாண்ட்விச்சும், டீயும் வரும். அப்படி வந் தால் அன்றைய படப்பிடிப்பை நள்ளிரவு 12 மணிக்கு முடிக்கப்போவதில்லை; அதிகாலை 2 மணி வரை தொடரப் போகிறது என்று அர்த்தம். இரண்டு, மூன்று நாட்கள் சாண்ட்விச், டீ கொடுத்த போது அமைதியாக இருந்த சத்யராஜ் 4-வது நாள் இரவு 11 மணிக்கு சாண்ட் விச், டீ வந்ததைப் பார்த்து , ‘என்னது.. இன்னைக்கும் அதிகாலை 2 மணி வரை படப்பிடிப்பா? ’ என்றார்.

அதற்கு நான், ‘இரவு ஷூட்டிங் ஐடியாவையே நீங்கதானே கொடுத்தீங்க. ஏப்ரல்ல படத்தை ரிலீஸ் செய்யணும்னா இன்னும் பல நாட்கள் சாண்ட்விச், டீ சாப்பிட்டா கணும்’ என்றேன் சிரித்துக்கொண்டே. அவரும் முக மலர்ச்சியோடு அதை ஏற் றுக்கொண்டு படப்பிடிப்பில் முழு ஒத் துழைப்பு கொடுத்து நடித்தார். உழைக்க அஞ்சாத கடும் உழைப்பாளி, சத்யராஜ்.

இரட்டை வேடம் ஏற்ற சத்யராஜுக்கு கவுதமி, ரூபிணி என 2 பேர் ஜோடி. ஆர்.டி.பர்மன் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘அடடா வயசுப் புள்ள அடியெடுத்தா ஜல்..ஜல்’ என்ற பாடல் நல்ல தாளக்கட்டோடு அமைந்தது. பாட்டுக்கு சத்யராஜ், கவுதமி இருவரும் நடனம் ஆடினார்கள். நல்ல தாளத்துக்கு நல்ல நடனம் அமைந்து விட்டால் பாட்டு இன்னும் சிறப்பாகிவிடும்.

நடனம் சிறப்பாக வரவேண்டும் என்று எங்கள் நடன இயக்குநர் புலியூர் சரோஜா, அவர்கள் இருவரையும் பிழிந்து எடுத்துவிட்டார். வாகினி ஸ்டுடியோ வில் கலை இயக்குநர் சலம் அமைத்த செட்டில் நடனம் பிரம்மாண்டமாக அமைந்தது. டி.எஸ்.விநாயகத்தின் ஒளி வண்ணம் அந்தப் பாட்டை பிரகாசமாக்கியது.