சந்திரபாபுவின் வாழ்க்கை சம்பவத்தை படமாக உருவான அந்த 7 நாட்கள்

28

நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை, கருவாக எடுத்து, அதன் திரைக்கதையில் வர்ணஜாலம் காட்டியிருந்தார் கே.பாக்யராஜ். அவரை ஏன் திரைக்கதை மன்னன் என மக்கள் கொண்டாடுகின்றனர் என்ற கேள்விக்கு, இப்படம் ஒன்றே விடையாகும்.

என் காதலி, உங்கள் மனைவி ஆகலாம்; ஆனால், உங்கள் மனைவி, ஒருபோதும் என் காதலியாக மாற முடியாது’ என்ற ஒற்றை வசனம் தான் அந்த ஏழு நாட்கள் படத்தின் கிளைமேக்ஸ்.

பாக்யராஜின் காதலியான அம்பிகாவை சூழ்நிலை காரணமாக, ராஜேஷுக்கு, இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைப்பர். முதலிரவு அன்றே, தன் காதல் குறித்து அம்பிகா கூற ‘உன் காதலனுடன் சேர்த்து வைக்கிறேன்’ என ராஜேஷ் உறுதியளிப்பார். அதன் முடிவு என்ன என்பதே, கதைக்களம்.

பாலக்காட்டு மாதவன் கதாபாத்திரத்தில், பாக்யராஜ் பின்னி பெடலெடுத்திருப்பார். அவரது உதவியாளர் கோபியாக நடித்த, காஜா ஷெரீப் படத்தில் இடம்பெறும், துன்புறு முரண் நகைச்சுவைக்கு காட்சிகளுக்கு பக்க பலமாக இருப்பார்.

வசந்தியாக அம்பிகா, டாக்டர் ஆனந்த் கதாபாத்திரத்தில் ராஜேஷும், இயல்பாக நடித்திருந்தனர். இந்த நான்கு கதாபாத்திரங்கள் தான், படத்தின் அஸ்திவாரம். அதை வைத்து, திரைக்கதையால் கோபுரம் அமைத்திருந்தார் கே.பாக்யராஜ்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘கவிதை அரங்கேறும் நேரம்…’ உள்ளிட்ட பாடல்கள் இன்றும் பலரின் விருப்பப் பாடல்களாக உள்ளன. இப்படம் ராதா கல்யாணம் என, தெலுங்கிலும்; வோ சாத்தின் என, ஹிந்தியிலும் லவ் மாடி நோடு என, கன்னடத்திலும், ‘ரீமேக்’ செய்யப்பட்டது. அந்த ஏழு நாட்கள், மறக்கவே முடியாத படங்களில் ஒன்று.