இதை மட்டும் செய்யாதீங்க! தமன்னா வேண்டுகோள்

11

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை தமன்னா. இவர் கொரோனா லாக் டவுனில் வீட்டில் இருந்து அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் தலைகீழாக நிற்கும் உடற்பயிற்சியை செய்கிறார். எந்தவிதமான பிடிப்பும் இன்றி அவரே தலையை கீழே வைத்து காலை மேலே தூக்கி உயர்த்துகிறார். அவரருகில் உதவிக்கு ஒரு பயிற்சியாளர் இருந்தாலும் அவரது உதவி இல்லாமலே அவர் தலைகீழாக நிற்கின்றார். இருப்பினும் அவர் கடைசியில் கீழே விழுந்துவிடுவதுபோல் அந்த வீடியோ முடிகிறது.

இதுகுறித்து தமன்னா கூறுகையில், வீழ்ச்சி மற்றும் தோல்வியினால் துவண்டுவிட வேண்டாம். உங்களுக்கு கிடைக்க வேண்டு ஒன்று, பல தோல்விகளுக்கு பின்னரே கிடைக்கும். பலமுறை முயற்சி செய்து, பலமுறை விழுந்த பின்னரே என்னாலும் தலைகீழாக நிற்க முடிந்தது. ஆனால் தயவு செய்து யாரும் இதனை பயிற்சியாளர் இல்லாமல் தனியாக செய்ய வேண்டாம்’ என்று தமன்னா கூறியுள்ளார்.