மீண்டும் அனிருத் இசையில் விஜய் பாடும் குட்டிக்கதை

பார்வையாளர்களின் விமர்சனம் மீண்டும் அனிருத் இசையில் விஜய் பாடும் குட்டிக்கதை 0.00/5.00


பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‛மாஸ்டர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் முதன்முறையாக இப்படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இவர்களைத் தவிர ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், அழகம் பெருமாள், ரம்யா சுப்ரமணியன், கவுரி கிஷான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் ‛மாஸ்டர் படத்தின் முதல் பாடலாக ‛ஒரு குட்டிக் கதை… என தொடங்கும் பாடல், நாளை பிப்., 14ம் தேதி காதலர் தினத்தன்று மாலை 5மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். தன் படங்களின் இசை வெளியீட்டு விழாவின் போது விஜய் குட்டிக் கதை சொல்வது வழக்கம். இப்போது அதை தனது படத்தில் ஒரு பாடலாக பயன்படுத்தி இருக்கிறார்.

இதற்கு முன்பு அனிருத் இசையில் கத்தி படத்தில் ‛செல்பி புள்ள… பாடலை பாடிய விஜய், மாஸ்டர் படத்தில் “ஒரு குட்டி கதை” என தொடங்கும் பாடலை பாடி உள்ளார். தற்போது இணையதளங்களில் விஜய் ரசிகர்கள் ஒரு குட்டிக்கதை என்ற ஹேஷ்டேக்கை வைரலாக்கி வருகின்றனர்.
#OruKuttyKathai #Master #Anirudhravichander #Vijay #Loversday @anirudhofficial @Dir_Lokesh @actorvijay @JayalaxmiPpm @VijaySethuOffl @MalavikaM_

Previous articleActor Mahat Wedding Anniversary Photos
Next articleடுவிட்டரை தெறிக்க விடும் ஒரு குட்டிக்கதை