அஜித் படத்தில் மீராமிதுன்! இதுவரை வெளிவராத தகவல்

37

நடிகர் அஜித் குமாருக்கு நேற்று அவரது பிறந்த நாளை ரசிகர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் கொண்டாடினர். திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அஜித் பிறந்த நாள் குறித்த ஹேஷ்டேக் 11 மில்லியனுக்கும் அதிகமாக பகிரப்பட்டது.

இந்நிலையில் தல அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான மீராமிதுன், அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் தான் நடித்து இருந்ததாகவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக தன்னுடைய காட்சி படத்தில் இடம் பெறவில்லை என்றும் இருப்பினும் அஜித்துடன் முதல்முறையாக நடித்தது தனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். இதுவரை வெளிவராத இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அஜித் படத்தில் மீராமிதுன் நடித்த தகவலும் அஜித் ரசிகர்களுக்கு மட்டுமின்றி சினிமா ரசிகர்களுக்கே ஒரு ஆச்சரியமான தகவலாக உள்ளது.