Primary Menu

Top Menu

விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!!

அஜித் – சிவா கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த வாரத்தில் படத்தின் டீசர் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படம் நல்ல தொகைக்கு விலைபோனதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அஜித் இந்த படத்தில் தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மதுரை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டி.இமான் இசையில் படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் 2019 பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது.

டுவிட்டரை கலக்கும் ஆரவ் , ஓவியா காதல் டுவிட்கள் !!

பிக் பாஸ் லவ் ஜோடி ஆரவும் ஓவியாவும்...

Leave a Reply