Primary Menu

Top Menu

அஜித்தின் ஒரு லுக் போதும்… விஸ்வாசத்தை பார்த்து வியந்த வில்லன்!

விஸ்வாசம்’ வெற்றிக்கு படத்தின் ஒரு லுக் போதும் என்று அஜித்துக்கு வில்லனாக நடித்த பிரபல நடிகர் கூறியுள்ளார்.

இயக்குநர் சிவா – அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூலம் அஜித்துக்கு முதன்முதலாக இசையமைக்கிறார் டி.இமான்

விவேகம், வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து 4-வது முறையாக இயக்குநர் சிவாவுடன் அஜித் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்தப் படத்தில் அஜித் இரு வேடங்களில் நடித்திருப்பதால் இந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

பேட்ட படத்துடன் விஸ்வாசம் பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கும் நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபடுள்ளனர். சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டிருந்த படக்குழுவினர், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். அதையும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துள்ளனர்

டுவிட்டரை கலக்கும் ஆரவ் , ஓவியா காதல் டுவிட்கள் !!

பிக் பாஸ் லவ் ஜோடி ஆரவும் ஓவியாவும்...

Leave a Reply