Primary Menu

Top Menu

சினிமா தொழிலார்களுக்கு தலா ஒரு சவரன் தங்கம் வழங்கும் விஜய்சேதுபதி…!!

தமிழின் முதல் சினிமாவான கீசகவதம் வெளியாகி 100 ஆண்டுகள் ஆகிய நிலையில் சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.


உலகாயுதா சார்பில் 100 சினிமா தொழிலார்களுக்கு தலா ஒரு சவரன் தங்கத்தை வழங்குகிறார் விஜய் சேதுபதி.இந்த நிகழ்ச்சி வரும் மே 1 அன்று தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடக்கிறது.


இதுகுறித்து உலகாயுதா தலைவர் எஸ்.பி.ஜனநாதன் பேசுகையில்,பேசும் படம் வெளியாகி 75 ஆண்டுகள் நிறைவடைந்த தொடர்ந்து 75 கலைஞர்களுக்கு தங்கம் வழங்குகிறோம் ,அதுபோல் முதல் சினிமா வெளியாகி 100 ஆண்டுகள் ஆனாதையொட்டி 100 பழம் பெரும் திரைப்பட தொழிலார்களுக்கு தலா ஒரு பவுன் தங்கம் வழங்கிகிறோம் என்றார்.


விஜய்சேதுபதி பேசுகையில் கற்பனையில் கூட நினைக்காத வாழ்க்கையை சினிமா எனக்கு கொடுத்திருக்கிறது அந்த சினிமாவுக்கு நான் செய்யும் நன்றி கடன் இது என்றார்