Primary Menu

Top Menu

நயன்தாராவுடன் இணையும் விக்னேஷ் சிவன்…!!

நயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ படம் ரிலீசாக இருக்கிறது. கே.எம்.சர்ஜுன் இயக்கியுள்ள இந்த படத்தில், முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நயன்தாரா.
இதுதவிர ‘கொலையுதிர் காலம்’, ‘மிஸ்டர்.லோக்கல்’ ஆகிய தமிழ் படங்களிலும், ‘சைரா நரசிம்ம ரெட்டி’ தெலுங்கு படத்திலும், ‘லவ் ஆக்‌‌ஷன் டிராமா’ மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார். அடுத்து விஜய் ஜோடியாக ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்துக்கு பிறகு ‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் நடிக்கிறார் நயன்தாரா. நாயகியை மையப்படுத்திய கதையாக உருவாகும் இந்தப் படத்தை, இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 Comments



Leave a Reply