விஜய் டிவியின் ரேட்டிங்கிற்கு ஆப்பு வைக்கும் சன் டிவி…!

184

தொலைக்காட்சி நிறுவனங்களின் போட்டி சற்றும் ஓய்வில்லாமல் நடைபெற்று வருகிறது. அதிலும், சன் டிவி, விஜய் டிவி இந்த இரண்டு தொலைக்காட்சியும் வார கடைசி நேரத்தில் போட்டி போட்டு புது படங்களை போடுவார்கள். 


மேலும் தங்களது ரேட்டிங் உயர வேண்டும் என்பதற்க்காக புது புது நிகழ்ச்சிகளை அமைத்து ரசிகர்களை கவர்கின்றனர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பிக்பாஸ் 3” நிகழ்ச்சியை பலர் ரசித்து பார்த்து வருகின்றனர்.


இதனால் சன் டிவியின் ரேட்டிங் சற்று குறைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதனால் வார கடைசியில் புது படங்கள், புதுவிதமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி விஜய் டிவி பக்கம் ரசிகர்களை திரும்பாத வண்ணம் வைத்துள்ளனர்.

Image result for bigg boss 3


விஜய் டிவியில் ஞாயிற்று கிழமையில் ஒளிபரப்பாகும் “பிக்பாஸ் 3” நிகழ்ச்சியை யாரும் காணாத வகையில், சன் டிவி ஒரு புதிய பிளான் வைத்துள்ளது.


அதாவது, “சண்டே டபுள்” என்ற பெயரில் இந்த இந்த வாரம் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற “கில்லி” படத்தையும், அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பிகில்” வெளியிட்டு விழாவையும் ஒளிபரப்புகின்றனர்.


இதனால் விஜய் டிவியின் ரேட்டிங் குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.