பிக்பாஸில் நுழைந்த வனிதா மகள்கள்…!

41

கடந்த சில தினங்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களின் உறவினர்கள் வருவது வழக்கமாக இருந்து வருகிறது. சமீபத்தில் லாஸ்லியாவின் தந்தை வரும் போது லாஸ்லியா கதறி அழுதார்.


லாஸ்லியா அழுவதை பார்த்து அங்கு உள்ளவர்கள் அனைவரும் நெகிழ்ந்து போனார்கள். அதற்கு முன் சீக்ரெட் அறையில்  இருந்த  சேரன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார்.


இதனை தொடர்ந்து இன்றைய ப்ரோமாவில், வனிதாவின் குழந்தைகள் வரும்போது வனிதா ஜாலியாக சிரித்துக் கொண்டே ’வாயாடி பெத்த பொண்ணு’ என்று கூறி அவர்களை வரவேற்று, அவர்களுக்கு சாப்பாடு ஊட்டி மகிழ்கிறார்.


இதனை தொடர்ந்து மற்ற போட்டியாளர்களின் உறவினர்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து வருகின்றனர்.